24 special

கொடைக்கானலில் அதிகமாகும் இந்த விவகாரம்... ரொம்பவே கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்...

KODAIKKANAL
KODAIKKANAL

தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைவரது விருப்பமான குளிர் சுற்றுலா தளமாக உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய மிகவும் குளிர்ச்சியான பகுதிகளில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியானது முன்னிலை இடங்களில் உள்ளது அதனால் பெரும்பாலான தமிழக மக்கள் தங்களது கோடை விடுமுறைகள் மற்றும் மற்ற விடுமுறை நாட்களை இந்த குளிர் தளங்களில் செலவழித்து வருகின்றனர். குடும்பமாக ஏதாவது ஒரு குளிர் பிரேதேசத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட நாம் அனைவரும் நியாபகத்திற்கும் முதலில் வருவது கொடைக்கானல் தான் அதற்குப் பிறகு தமிழகத்தை தாண்டிய மற்ற குளிப்பிரதேசங்கள் நமக்கு ஞாபகத்திற்கு வரும் ஏனென்றால் கொடைக்கானலை எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் உள்ள அனைவராலும் மிகவும் எளிமையாக வந்து சொல்ல முடியாது ஒன்று செலவும் எளிதாக கணித்து விட முடியும்.


இப்படி குடும்பமாக ஒரு சுற்றுலாவிற்கு செல்ல வேண்டுமென்றால் எப்படி கொடைக்கானல் நமது ஞாபகத்திற்கு வருகிறதோ அதேபோன்று நண்பர்கள் மற்றும் கணவன் மனைவி என இருவரும் ஒரு சுற்றுலா பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் ஞாபகத்திற்கு வருவது கொடைக்கானல் மட்டும்தான் நினைவிற்கு வரும். அப்படி கொடைக்கானல் செல்பவர்கள் பலருக்கும் மேஜிக் காலம் பற்றிய தேடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் இதன் மீது எந்த ஒரு ஆர்வமும் இல்லாததால் அவற்றை கண்டு கொள்வதில்லை. ஆனால் மற்ற சிலரோ இந்த போதை காளானை தேடுகிறார்கள் குறிப்பாக இளைஞர்கள் இதனை ஒரு முறையாவது உபயோகித்து பார்த்துவிட வேண்டுமென்று தேடலில் போதைக்காளானை தேடி கொடைக்கானலுக்கு செல்கிறார்கள் சில ஹோட்டல்களிலும் இவற்றை விசாரிக்கிறார்கள் ஆனால் அவர்கள் விசாரிக்கும் அனைத்து ஹோட்டலிலும் இது கிடைப்பதில்லை! அதனால் அங்கீகரிக்கப்படாத ஒரு ஹோட்டலுக்கு சென்றால் இவற்றை நாம் வாங்கிவிடலாம் என நினைத்து அங்கும் பல இளைஞர்கள் செல்கிறார்கள். 

அதுமட்டுமின்றி இந்த போதை காளானுடன் சேர்ந்து கஞ்சாவையும் விற்பனை செய்ய சில கும்பல் அங்கு இயங்கி வருகிறது. அந்த கும்பல் அடிக்கடி கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். இருப்பினும் போதை காளான் மற்றும் கஞ்சா உபயோகித்து பல உயிரிழப்புகள் கொடைக்கானலில் நடந்து வருவதாகவும் சட்டவிரோதமாக இவற்றை விற்பனை செய்து வருகிறார்கள் என்ற புகார்களும் தொடர்ந்து எழுந்தது அடுத்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராம் தலைமையிலான போலீசார் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.அந்த சோதனைகளில் கூக்கால் பகுதியில் இருந்த ஒரு சொகுசு விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது வீரனன் மகன் தனராஜ் என்பவரிடமும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 60 கிராம் போதை காளான் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை தனராஜ் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி கொடைக்கானலில் மேல்மலை கிராமமான பூம்பாறையிலும் அனுமதி இன்றி காட்டேஜ்கள் செயல்படுவதாகவும் எழுந்த புகாரை அடிப்படையாக வைத்து அங்கும் காவல்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வுகளை நடத்தினார். அப்பொழுதுதான் அந்தப் பகுதியில் ஒரு விடுதி பல ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகளை நடத்தக்கூடாது அப்படி நடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கூக்கால் பகுதியில் இயங்கி வந்த விடுதியானது ஆசிரமம் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.