24 special

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும்...! அண்ணாமலை ஆவேசம்

Annamalai,senthil balaji
Annamalai,senthil balaji

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தார், அப்போது ஆளுநரிடம் இரண்டு முக்கிய மனுக்களை கொடுத்தார் அதில் கள்ள சாராயம் மரணம் தொடர்பானது இரண்டாவது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்து இருக்கிறார் அண்ணாமலை.


இதில் அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என அண்ணாமலை கொடுத்து இருக்கும் மனு சற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில் இன்றுவரை முதல்வர் அமைதியாக இருக்கிறார்.

ஆளும் கட்சி அமைச்சர் மீதான விசாரணை எப்படி நேர்மையாக நடக்கும் எனவே ஆளுநர் முதல்வரை தொடர்பு கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க அறிவுறுத்த வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். இங்கு தான் ஆளும் கட்சிக்கு சிக்கல் உண்டாகி இருக்கிறது செந்தில் பாலாஜி மீதான விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என வழக்கு தொடர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றால் உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுவை அமைப்பதுடன் வழக்கு விசாரணயை வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவு போட்டால் அரசியல் அரங்கில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதால் என்ன செய்வது என விழி பிதுங்கி இருக்கிறதாம் ஆளும் திமுக.

போதாத குறைக்கு ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த அண்ணாமலை, செந்தில் பாலாஜி வழக்கு முழுக்க முழுக்க நேர்மையாக விசாரணை நடைபெறாது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என கூறியதோடு நில்லாமல், எந்த ஒரு மனிதனாவது லஞ்சம் வாங்கினேன் திருப்பி கொடுத்து விட்டேன் என கூறி நீதிமன்றம் சென்று பார்த்து இருக்கிறோமா?

செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் இல்லை என்றால் பொறுத்து இருந்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் அண்ணாமலை. மொத்தத்தில் தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்தால் அடுத்தடுத்து இன்னும் பல பின் விளைவுகளை ஆளும் கட்சி சந்திக்க வேண்டி இருப்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.