24 special

என்ன திருமாவளவன் நிலைமை இப்படி ஆகிப்போச்சு...!ஒரு கப் காப்பி

Thirumavalavan
Thirumavalavan

கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையவை வாழ்த்த சென்ற திருமாவளவனை கதவிற்கு வெளியே நிற்க வைத்ததோடு நில்லாமல் சால்வை அணிவிக்க திருமாவளவன் தயாரான நிலையில் காபி கொடு என வாங்கி சித்தராமைய குடித்ததும் அதுவரை கையில் துண்டோடு திருமாவளவன் காத்து நின்ற காட்சிகள் தற்போது கடும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.


கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பு விழாவிற்கு நாங்கள் பாஜகவிற்கு எதிராக ஒரு அணியில் நிற்க போகிறோம் என கிளம்பிய தமிழகத்தை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் இருவரும் அங்கு சந்தித்த தர்ம சங்கட நிகழ்வுகள் இப்போது வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கர்நாடக முதல்வர் பதவிஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டாம் பக்க பின் இருக்கையில் சீட் ஒதுக்கதோடு தலைவர்கள் கை கோர்த்து நின்ற நேரத்தில் பிரியங்கா காந்தியை அழைத்த நேரத்தில் ஸ்டாலின் பின்னே தள்ளப்பட்டார். இதை பல்வேறு திமுகவினரே கண்டித்து கருத்துக்களை பதவு செய்து வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க சென்ற திருமாவளவன் வாசலுக்கு வெளியே கதவை அடைத்து நிற்கவைத்த தோடு உள்ளே கூட்டதோடு கூட்டமாக சென்றார். சார் எம் பி திருமாவளவன் என சொன்ன பிறகும் சித்த ராமையா எந்த ரியாக்டும் சொல்லவில்லை. காபி கொடு என கத்திய நிலையில் வந்திருந்த திருமாவளவனுக்கு தான் கேட்கிறாரோ என நினைத்து இருந்த சூழலில் காபியை வாங்கி குடித்தார் சித்தராமையா 

சித்தராமையா காபி குடிக்கும் வரை சிரித்த முகத்துடன் கையில் கொண்டு சென்ற மஞ்சள் நிற துண்டை வைத்து கொண்டே நின்றார் திருமா? இறுதியில் ஒரு வழியாக சித்தராமையாவிற்கு சால்வை போட்டு கிளம்பி இருக்கிறார் திருமா.

இந்த சூழலில் பிரதமர் மோடி எப்படி எதிர் கட்சி தலைவர்களை மதிப்புடன் நடத்துகிறார் ஆனால் அவர் மீது குறை சொல்லும் திருமா போன்றோர் வாசலுக்கு வெளியே நின்று சித்தராமையாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? கர்நாடகாவில் அவமான பட்டது வெறும் திருமாவளவன் மட்டுமல்ல சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மக்களும் தான் என திருமாவளவனை சமூக வலைத்தளங்களில் சிதம்பரம் மக்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் சேர் சர்ச்சையில் சிக்கிய திருமா கர்நாடக முதல்வர் அறை வாசலில் கால் கடுக்க கூட்டதோடு கூட்டமாக நின்றது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.