தமிழக பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் நேரடியாக சந்திக்கும் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையின் முதல் கட்டம் கடந்த மாத இறுதியில் முடிவு பெற்று சில காலம் ஓய்வு காலமாக விடப்பட்டது அதற்குப் பிறகு செப்டம்பர் நான்காம் தேதி இந்த யாத்திரையின் இரண்டாவது கட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் கட்டத்தில் தென் தமிழகத்தை முழுவதும் தனது பேச்சாலும் மக்களுக்கு அளித்த நம்பிக்கை உணர்வாலும் அவர் பக்கம் திருப்பி அண்ணாமலை தற்போது தனது இரண்டாம் கட்ட நடை பயணத்தை தென்காசியில் தொடங்கி விருதுநகர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் மற்றும் போடிநாயக்கனூரில் இப்போதைய யாத்திரை நடைபெற்றுள்ள நிலையில் இப்பகுதியிலும் அண்ணாமலைக்கு முதல் கட்டத்தில் கிடைத்த வரவேற்பை விட அதிகமாக கிடைத்துள்ளது என்றும் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அரசுக்கு எதிரான மற்றும் அதிருப்தி நிறைந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இப்படி அண்ணாமலை தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியையும் தனது பக்கம் திருப்பி வருகின்ற சமயத்தில் திமுகவிற்கு எதிரான மற்றும் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் செயல்களே தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது. அதற்கு வேறு யாரும் காரணமாக இல்லை கட்சியினரே காரணமாக உள்ளனர் என்ற தகவல் திமுகவின் தலைமையையும் ஆட்டம் காண வைத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படி அண்ணாமலையின் யாத்திரை, திமுக ஆட்சியில் இருக்கும் அதிருப்திகள் சனாதனம், குறித்து முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் இவை அனைத்தும் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ரகசியமாக உளவுத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டதாகவும் அந்த ஆய்வின் ரிப்போர்டும் முதல்வருக்கு சென்றுள்ளதாகவும் அந்த ரிப்போர்ட்டை கண்டு முதல்வர் அதிர்ச்சி அடைந்து ஒரு திட்டத்தில் இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இப்படியே இருந்தால் தேர்தல் சமயத்தில் வாக்குகள் நமக்கு விழுவதற்கு வாய்ப்புகள் இல்லை, டெபாசிட் கூட கிடைக்காது என அறிக்கையின் ரிப்போர்ட் வந்துள்ள காரணத்தினால் தற்போது தமிழக முதல்வர் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சென்னை நீலகிரி மாவட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியராக சென்னை மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட அருணா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாவட்ட ஆட்சியராக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றிய ராஷ்மி சித்தார்த் ஜகடேவையும், சித்ரா விஜயன் ஐஏஎஸ் அதிகாரிக்கு தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்ட தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குனர் என்ற இரண்டு பொறுப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹனிஷ் சாப்ரா என்பவருக்கு தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் பொறுப்பும் நந்தகோபால் என்பவருக்கு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையர் பொறுப்பும் கொடுத்து இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறக்கத்துள்ளார். திமுக அரசின் இந்த திடீர் முடிவிற்கு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முக்கிய காரணம் என்றும் அதற்காகவே தமிழக முதல்வர் இந்த அதிரடி மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது...