24 special

சவுக்கு சங்கர் பேட்டியில் சொன்ன விசயத்தால்... அதிர்ந்து போன செந்தில் பாலாஜி

Senthil balaji, savukku sankar
Senthil balaji, savukku sankar

கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் 350 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. கிடைத்த ஆவணங்களை வைத்து அடுத்தபடியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என வருமானவரித்துறையினர் தற்பொழுது ஆராய்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் தற்பொழுது செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 


இந்த நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி வரும் வீட்டின் நிலம் அவரது தம்பியின் மாமியார் பெயரில் உள்ளது எனவும் அந்த மாமியாரை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் வருமானவரித்துறையினர் ரெய்டுக்கு பயந்து பதுங்கி விட்டார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. வருமானவரித்துறை கண்காணிப்பில் இருக்கும் அந்த வீடு பல கோடி ரூபாய் மதிப்புள்ளது எனவும், அந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கட்டுவதற்கு விலை உயர்ந்த மார்பில்கள், விலை உயர்ந்த அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், வீட்டின் உள்ளே லிப்ட் வசதி அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன என்ற புகார் எழுந்துள்ளதால் தற்பொழுது கட்டுமானத்தை நிறுத்தி வைக்கும் அளவிற்கு சோதனையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்னும் 30 நாட்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறை செல்வார் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் கூறுகையில், 'இன்னும் 30 நாள் தான் செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி' என அடித்து கூறியுள்ளார். செந்தில் பாலாஜி குறித்த தகவல்களை அவ்வப்போது தனது சமூக வலைதள மூலம் வெளியிட்டு வரும் சவுக்கு சங்கர் அந்த நேர்காணலில் கூறியதாவது, 'திமுக கட்சியை செந்தில் பாலாஜி கபளீகரம் செய்து விட்டார். அண்ணா நகர் எம்எல்ஏ மோகன் மற்றும் சபரீசன் ஆகியோரின் நெருக்கமானவர்களின் வீடுகளுக்கு ரெய்டு வரும் பொழுது கூட திமுகவிலிருந்து யாரும் இப்படி கொதிக்கவில்லை, ஆனால் செந்தில் பாலாஜியின் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வீடுகளில் ரெய்டு நடந்து வரும் பொழுது ஏன் இந்த பதற்றம்? எதற்காக இப்படி பதற வேண்டும்? அப்படி என்றால் செந்தில் பாலாஜி திமுகவை கபளீகரம் செய்துவிட்டார் என்று தானே அர்த்தம்? இவ்வளவு ஏன் முதல்வர் ஸ்டாலின் கூட ஜப்பான் பயணத்திலிருந்து வந்தவுடன் ஏர்போர்ட்டில் என்ன பேசினார்? செந்தில் பாலாஜியின் வீட்டில் நடக்கும் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றார். அந்த அளவிற்கு முதல்வரை செந்தில் பாலாஜி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார், 

ஆனால் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை செந்தில் பாலாஜியை சும்மா விடாது! வருமானவரித்துறை அதிகாரிகளை அங்கிருந்த 70 போலீசாரம் காப்பாற்றவில்லை திமுகவினர் தாக்கட்டும் என விட்டுவிட்டனர். சி.ஐ.எஸ்.எப் மத்திய அரசு படை இறங்கியவுடன் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இந்த ரெய்டு நடந்தது இது தமிழகத்திற்கே மிகப்பெரிய அசிங்கம் இதனை மத்திய அரசு கவனித்து வருகிறது நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் 30 நாளில் செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி' என சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மற்றும் செந்தில் பாலாஜி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.