24 special

அண்ணாமலையை தொடர்ந்து எதிர்க்கும் sv சேகர்...!காரணம் இதுவா...?

Sv sekar,annamalai
Sv sekar,annamalai

நடிகரும் பாஜக நிர்வாகியாக உள்ள எஸ் வி சேகர் அடிக்கடி அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையான ஒன்று. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை ஆதரவாளர்களும் அதற்கான எதிர்பதில்களை தனது பதிவுகள் மூலம் பதிவிட்டு வருவார்கள். அதேபோன்று சில நாட்களுக்கு முன்பு எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார்.


இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது, நான் யாரையும் விரோதியாக நினைத்ததில்லை யாருக்கும் விரோதியாகவும் இருந்ததில்லை என்னை பிடிக்கவில்லை என்றால் டெல்லி சென்று என்னைப் பற்றி புகார் கொடுங்கள், டெல்லி செல்வதற்கு 6000 ரூபாய் டிக்கெட் நானே அதை போட்டுக் கொடுக்கிறேன், எனவே  அதில் சென்று என்னைப் பற்றி டெல்லி தலைமையகத்திடம் புகார் அளிக்கட்டும். பழைய பஞ்சாங்கத்தை  கூறி எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 

ஒரு கட்சியின் தலைவனாக இருந்தாலும் சரி தொண்டனாக இருந்தாலும் சரி இப்படித்தான் இருப்பேன் என்று எஸ்வி சேகர் தன்மீது சுமத்திய விமர்சனத்திற்கு கடும் கோபத்துடன் பதில் அளித்தார். அண்ணாமலையின் இந்த பதிவிற்கு எஸ் வி சேகர் அண்ணாமலை எதற்கு எனக்காக டிக்கெட் போட்டு தரணும்? அவரே அவரது நண்பர்கள் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் டெல்லி செல்ல வேண்டும் என்றால் நானே டிக்கெட் எடுத்துக் கொள்கிறேன் டெல்லி சென்று புகார் அளிக்கும் அளவிற்கு அண்ணாமலை ஒரு ஆளே கிடையாது நேரம் வந்தால் அவர்களே பதவியை விட்டு நீக்குவார்கள் என்றார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதற்கு எஸ்வி சேகரின் பதில் இதனுடனே நிற்கவில்லை மேலும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது வாஜ்பாய் காலத்தில் நான் ஓட்டு கேட்கும் போதே சொன்னேன் வாஜ்பாய் என்ற பெயரிலேயே பாய் உள்ளது பிறகு அவர் எப்படி பாய்களுக்கு எதிராக இருப்பார். ஏதாவது ஒரு வார்த்தை பேச தெரியுமா ரொம்ப குழந்தை தனமாக உள்ளது, என்ன மிஞ்சிப்போனா கட்சியை விட்டு தூக்குவாங்க அது யாருக்கு நஷ்டம் எனக்கா நஷ்டம், அண்ணாமலையை நான் ஏதாவது சொல்லிட்டா ஏதோ கடவுளையே ஏதோ சொல்லிட்ட மாதிரி எதிர்த்துக்கொண்டு வருவது பெரு முட்டாள்தனம். எனக்கு என்ன அண்ணாமலை மீது கோபமா, அவன்தான் சொன்னான் நான் உனக்கு டிக்கெட் வாங்கி தரேன் என்று அப்படி ஒரு புத்தி, இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை நான் டெய்லி கட்சி ஆபீஸ் சென்று அமர்ந்தால்  ஒரு லட்சம் வருமானம் வரும் என்கிற மனோபாவம் இருந்திருந்தால் நான் தினமும் கட்சி ஆபீசுக்கு செல்வேன்.  என்னுடைய ப்ரொபைல காட்டுறேன் அதுல ஏழு பக்கம் அந்த ஏழு பக்கத்தில் அரை பக்கத்தை அண்ணாமலையால எனக்கு ஈக்குவல பில் பண்ண சொல்லுங்க! 

இத்தனை ஆள் பலம் பணபலம் அனைத்தையும் கொடுத்தும் ஒரு எம்எல்ஏ சீட்டை கூட இவரால் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்ன முகராசி, இந்த மூஞ்சிய பார்த்த உடனே உனக்கெல்லாம் எதுக்கு ஓட்டு போடணும் என்று நினைத்து இருப்பார்கள் இதற்காகத்தான் ஊர்வலம் செல்கிறார்கள், அண்ணாமலை முகம் நம்பிக்கை கொடுக்கக் கூடிய மூஞ்சியாக உள்ளதா?

இப்படி எஸ் வி சேகர் அண்ணாமலையை தரம் தாழ்த்த பேசியது பாஜகவினரை கோபம் அடைய செய்துள்ளது, மேலும் எஸ்வி சேகர் தனியார் பத்திரிக்கை ஒன்றிக்கு பேட்டியளிக்கும்போது திமுக அமைச்சர் உதயநிதியை பாராட்டி பேசியிருந்தார், ஒடிசா ரயில் விபத்தில் உதயநிதி அங்கு சென்றது பாராட்டக்கூடியது என்று புகழ்ந்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. தன் கட்சியினரை சேர்ந்த அண்ணாமலையை தாழ்த்தி பேசி எதிர்க்கட்சியில் அமைச்சராக உள்ள உதயநிதியை எஸ் வி சேகர் பாராட்டி பேசி இருப்பதன் மூலம் என்ன இவ்வளவு நாளா ஸ்லீப்பர் செல்லாக நீங்கள் தான் இருந்து உள்ளீர்களா? என பாஜகவினர் தற்போது குறிப்பாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த கேள்வியை எஸ்.வி.சேகரை நோக்கி எழுப்பி வருகின்றனர்.