24 special

தொடர்ந்து அவமானப்படும் திருமாவளவன்...!திமுக கூட்டணியில் தொடர்வாரா..?

Thirumavalavan,mk stalin
Thirumavalavan,mk stalin

திமுகவிற்கு கூட்டணி கட்சிகள் என்றாலே சற்று இளக்காரமாக தான் இருக்கும் போலிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் அடிக்கடி கூறி வருவது தற்பொழுது மீண்டும் ஒருமுறை நிறுவனம் ஆகியுள்ளது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளை திமுக தேர்தல் சமயங்களில் வாக்கு வங்கியாகவும், பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்தும் மற்ற நேரங்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பளிக்காது அது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்காது என பல்வேறு கருத்துக்களை அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்து வருகின்றனர். 


அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் கூட இதனை அவ்வப்போது உறுதிப்படுத்துவதாக அமையும். குறிப்பாக  சில சம்பவங்களை கூற வேண்டும் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் ராஜா கண்ணப்பன் அவரை சந்திக்க சென்றபோது பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்தது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அடுத்ததாக சாக்கோட்டை எம்எல்ஏ அன்பழகன் அதே சம்பவம் நடந்து சில நாட்களில் மீண்டும் அவரை பிளாஸ்டிக் சேர் உட்கார வைத்ததும் இதுதானா நீங்கள் பேசும் சமூக நீதி என திமுகவை கடும் விமர்சனத்தை சந்திக்க வைத்தது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தமிழகத்தின் பல இடங்களில் கொடியை ஏற்ற விடாமல் விரட்டியடிப்பது போன்ற பல சம்பவங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை புலம்ப வைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவனே, 'நம்மளை கொடியை கூட ஏற்ற விட மாட்டார்கள் இதுதான் அரசியல்' என புலம்பெரும் குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டணி கட்சிகளை இளக்காரமாகவும், மரியாதை குறைவாகவும், பொது இடங்களில் கௌரவ குறைவாகவும் நடத்தி வரும் திமுக மற்றொரு சம்பவமாக கலைஞர் நூற்றாண்டு விழாவில் மீண்டும் ஒருமுறை கூட்டணி கட்சியினரை அவமானப்படுத்தியுள்ளது. 

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சியினரான வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் பேசும்போது கருணாநிதியை பற்றி புகழ்ந்து பேசினார், கருணாநிதியை பற்றி புகழ்ந்து பேசிவிட்டு அப்படிப்பட்ட கருணாநிதி போல் என்று ஸ்டாலின் இருக்கிறார் எனவே நீங்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். அழைப்பு விடுத்து பேச்சை முடித்துக் கொண்டு நகர்ந்த திருமாவளவனை குறுக்கிட்டு மைக்கை பிடித்த அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும்! அதனால் நேரமில்லை கூட்டணி கட்சியினர் சற்று நேரம் அஞ்சு அஞ்சு நிமிஷம் மட்டும் பேசிட்டு போங்க அப்படி என கூறியது திருமாவளவன் முகத்தில் அடித்தார் போல் இருந்தது. 

இப்பதானே சனாதன தர்மத்தை எதிர்க்க வந்த காவலர் நீங்கள்தான்,  எங்களை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் முதல்வரை புகழ்ந்து கூறினேன் அஞ்சு நிமிஷம் கூட ஆகல இப்படி மேடையில் அசிங்கப்படுத்தலாமே என்பது போன்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் திருமாவளவன். இப்படி கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட்டணி கட்சியினரை அவமதித்தது மேலும் திருமாவளவனை பேசவிட்டு பின்னர் அதிகம் பேச வேண்டாம் பேசியது போதும் என்கின்ற வகையில் அமைச்சர் சேகர்பாபு அவமதித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 

ஏற்கனவே கூட்டணி நிகழ்ச்சிகளை திமுக மதிக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் அவற்றை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.