உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 7 -ம் தேதி அமலாக்க துறை கஷ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகிறது, தொடக்கத்தில் இருந்தே அமலாக்கதுறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி உடல்நிலையை காரணம் காட்டி முழு ஒத்துழைப்பு அழிக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியது அமலாக்கதுறை.
செந்தில் பாலாஜியிடம் கரூரில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பங்களா யாருடையது என கேட்ட அதற்கு தம்பி மனைவியுடையது என கூறி இருக்கிறார் அதற்கு எப்படி பணம் வந்தது என கேட்க அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என செந்தில் பாலாஜி கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேரடியாக கரூர் சென்ற அமலாக்க துறையினர் பிரமாண்ட சொகுசு பங்களாவை ஆய்வு செய்தனர்,கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டாள் கோவில் கிழக்கு மண்மங்கலம் தாலுகாவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 2.49 ஏக்கரில் பங்களா வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில் சோதனை செய்தனர்.
பின்னர் பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சம்மன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை தொடர்ந்து அசோக் குமார் பங்களா வீட்டை முடக்கியிருப்பதாக மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டீஸில், “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அசோக் குமார் மனைவி நிர்மலாவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சேலம் பைபாஸ் சாலை, ஆண்டாள் கோவில் கிழக்கு கரூர் -63902 முகவரியில் உள்ள அசோக் குமார் மனைவி நிர்மலாவிற்கு சொந்தமான வீடு முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அனுமதியில்லாமல் இந்த வீட்டை வேறு யாருக்கும் மாற்றவோ விற்கவோ கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி சகோதரர் தொடங்கி சகோதரர் மனைவி, சகோதரர் மாமியார் என பலரும் தலைமறைவாக இருப்பதாகவும் அமலாக்கதுறை விசாரணைக்கு பயந்து செந்தில் பாலாஜி சகோதரர் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் நிலையில் பல முறை செந்தில் பாலாஜி சகோதரருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகத நிலையில் பிராமண்ட பங்களா கட்டியது தற்போது செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பி இருக்கிறதாம்.
50 நிலபத்திரங்கள் தொடர்பாகவும், பிரமாண்ட பங்களா தொடர்பாகவும் அமலாக்கதுறை எழுப்பிய கேள்விக்கு செந்தில் பாலாஜியிடம் பதில் இல்லையாம் இவை அனைத்தும் வீடியோ ஆதரமாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை இழப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் மாநில அமைச்சரவை பட்டியலில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்து இருப்பதாக வும் இனியும் தாமதம் செய்தால் திமுக ஆட்சிக்கு எதிராகவே செந்தில் பாலாஜி வழக்கு திரும்பும் என்பதால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விரைவில் நீக்கம் செய்ய படுவது உறுதியாகி இருக்கிறது.