மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த வழக்கின் இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியை புழல் சிறையில் அடைக்கவும் அவரது உடல்நிலை சரியானதும் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் மூன்றாம் தரப்பு நீதிபதி அளித்த உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கு பிறகு மூன்றாம் தரப்பு நீதிபதியின் விசாரணை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேல்முறையீடு செய்ததால் அவ்வழக்கின் விசாரணையும் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுக்க அனுமதி அளித்தது. இதனிடையில் செந்தில் பாலாஜி ஆரம்பத்தில் இருந்து நீதிமன்றத்தின் காவலில் இருந்து வருவதால் சென்னை முதன்மை நீதிமன்றத்தின் அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜியிடம் பல கேள்விகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ரெய்டின் மூலம் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களை குறித்தும் செந்தில் பாலாஜியிடம் கேள்வி கேட்கப்படுவதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரும் செந்தில் பாலாஜியின் மோசடிக்கு பல வகையில் உறுதுணையாக இருந்துள்ளதை அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக தொடர்ந்து சம்மந்தங்களை அனுப்பியும் வருகிறது, அதற்கு எதற்குமே அவர் செவிசாய்க்காமல் இன்னும் தலைமறைவாவே இருந்து வருகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளன.
இதனிடையே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தியது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஈடி அனுப்பிய நான்காவது சம்மனுக்கும் ஆஜராகாமல் உள்ளதால் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையாக செந்தில் பாலாஜியின் மனைவி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜரானால் செந்தில் பாலாஜியின் மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார், அப்படி நடக்காத பட்சத்தில் அசோக் குமார் ஆஜராகாமல் இருந்தால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
எப்படியும் செந்தில்பாலாஜி சகோதரர் தனது மனைவியை அமலாக்கத்துறை முன்பு ஆஜராக விடமாட்டார், அவரே வந்து அமலாக்கத்துறை வசம் எப்படியும் இன்னும் 48 மணி நேரத்தில் ஆஜராகிவிடுவார் என அமலாக்கத்துறை தரப்பு கணக்குகள் போட்டிருப்பதாகவும், இதன் காரணமாகவே அஷோக்குமாரின் மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி மனைவி ஆஜராகவேண்டும் என சம்மன் செல்லும் என அசோக்குமார் எதிர்பார்த்திருக்கமாட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றம் கொடுத்த அவகாசத்திற்கு எப்படியாவது செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு மற்றும் அவர் செய்த மோசடி பரிவர்த்தனைகளுக்கு தகுந்த ஆதாரங்களை திரட்டி விட வேண்டும் என அமலாக்கத்துறை மொத்தமாக ஸ்கெட்ச் போட்டு செய்து வருவது திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை அவரை சிறையில் அடைத்தாலும் அவருக்கு பல வசதிகளை நாம் செய்து தரலாம் என்ற நினைப்பில் இருந்து கொண்ட அறிவாலயத்தரப்பிற்கு தற்போது அமலாக்கத் துறை வைத்த அதிரடி அடியை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.