24 special

செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் ஆட்களே காலி பண்ண போறாங்களாமே...! வேற லெவல் தகவல்கள்...

SELVAPERUNTHAGAI, RAHULDANDHI
SELVAPERUNTHAGAI, RAHULDANDHI

 தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது  இந்திய தேசிய காங்கிரஸ் தமிழகத்தை தவிர பல மாநிலங்களில் வெற்றியை கண்டு வருகிறது அதே சமயத்தில் முக்கிய எதிர்க்கட்சியாகவும் உள்ளது. ஆனால் அக்கட்சியால் தமிழகத்தில் மட்டும் தனித்து செயல்பட முடியாத சூழ்நிலை தான் நிலவி வருகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் இழுத்தடிக்கப்படுவது தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. அந்த வகையிலேயே லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே எஸ் அழகிரியை நீக்கிவிட்டு செல்வப் பெருந்தகையை காங்கிரஸ் தலைமை நியமித்தது. அவரது தலைமையிலேயே காங்கிரஸ் தமிழகத்தில் செயல்பட மீண்டும் திமுக உடனான கூட்டணியில் இணைந்து கொண்டது. தேர்தல் முடிந்த பிறகு நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வ பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை இந்தியாவிலேயே முதன்மையானதாக உருவாக்க வேண்டும் அதற்காகவே ராகுல் காந்தி 24 மணி நேரமும் உழைத்து வருகிறார்.


இதனால் நாம் தொடர்ந்து பிறரை சார்ந்திருக்க போகிறோமா அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா என்று கேள்விக்கான விடையை உங்களிடமே எதிர்பார்க்கிறேன் என்று தனது தொண்டர்கள் முன்னிலையில் ஆவேசமாக பேசியிருந்தார். செல்வப் பெருந்தகையின் இந்த பேச்சிற்கு பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்படும் என அரசியல் வட்டாரம் முழுவதும் கிசு கிசுக்கப்பட்டது ஆனால் அதனை மறுத்தார் செல்வப் பெருந்தகை. ஒரு பக்கம் தனது தொண்டர்களிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி சுயமாக செயல்பட வேண்டும் என்று உணர்ச்சி பொங்க பேசிவிட்டு மறுபக்கம் இந்த கமிட்டி வளர்ந்தால் என்ன? வளராவிட்டால் எனக்கென்ன? என்று தனது ஈகோவால் காங்கிரஸ் வார் ரூமையை முடக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது, 2019 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே எஸ் அழகிரி தலைவராக இருந்த பொழுது துணைத்தலைவரான பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தான் வார் ரூம் அமைக்கப்பட்டது. அவர்களின் தலைமையில் தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் என அனைத்திற்கும் வியூகங்கள் வகுத்து செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரியில் செல்வப் பெருந்தகை புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கே எஸ் அழகிரியின் ஆதரவாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி என்பதால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை வார் ரூம் பணியில் இருந்து பின்வாங்க வைத்தார். அதற்குப் பிறகு டெல்லி லாபி மூலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வார் ரூம் தலைவர் பொறுப்பை தனதாக்கி கொண்டார் வசந்த ராஜ், ஆனால் இந்த பொறுப்பில் தனது ஆதரவாளர் ஒருவரை அமர்த்த வேண்டும் என்பதால் வசந்த் ராஜ் பொறுப்பை ஏற்றதும் செல்வப் பெருந்தகைக்கு ஏக கடுப்பாக இருந்துள்ளது. 

இதனை அடுத்து வசந்தராஜுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக மூன்று பேரை துணை தலைவர்களாக செல்வ பெருந்தகை நியமிக்க அதிலும் சில மோதல்கள் ஏற்பட்டு நிலைமை பெருமளவில் மோசமாக மாறியது ஆனால் இதில் சசிகாந்த் செந்தில் நுழைந்து தேர்தலில் முக்கியத்துவத்தை பற்றியும் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதை எடுத்துரைத்து தேர்தலின் பொழுது வார் ரூமை இயங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்றது திமுக, ஆனால் தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் வார் ரூமின் செயல்பாட்டை செல்வப் பெருந்தகை முற்றிலுமாக முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி வார் ரூம்மில் பணியாற்றியவர்களிடம் இது குறித்து கேட்கும் பொழுதும், ஈகோ காரணமாக தற்போது வார் ரூம் செயல்பாட்டை செல்வப் பெருந்தகை முடக்கிவிட்டார் என்றும், இதனால் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகங்களை தற்போது எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதாலும் இதில் கட்சி தலைமை தலையிட்டு தான் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியிலே தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று கட்சிக்குள் நடக்கின்ற கோஷ்டி பூசலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் இங்குள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் செல்வப்பெருந்தகையை தூக்கவேண்டும் எனவும் டெல்லியில் போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம்....