24 special

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி இனி அம்போ...! திமுக ஆட்டம் க்ளோஸ்...!

Senthil balaji,mk stalin
Senthil balaji,mk stalin

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி முடிவிற்கு வருவது டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது அதிலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்த மூன்று கருத்துக்கள் தான் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு உலை வைத்து இருக்கிறது.


டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால்  அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் இதே வழக்கில் அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவருடைய ஜாமீன் மனுக்களை  ஊழல் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.

இதையடுத்து சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அதில், “இந்த வழக்கை ஆய்வு செய்தபோது, ரூ.338 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றது தற்காலிகமாக தெரிய வந்துள்ளது. மேலும் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது.

எனவே, மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தான் சிசோடியா வழக்கை எதிர் பார்த்து காத்திருந்த செந்தில் பாலாஜிக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது.

எப்படியும் சிசோடியாவிற்கு ஜாமின் கிடைக்கும் அவரது வழக்கை சுட்டி காட்டி தாமும் வெளியில் வந்து விடலாம் என கணக்கு போட்டு இருந்தார் பாலாஜி, முதல்வர் ஸ்டாலினும் இதே நம்பிக்கையில் இருந்தார் ஆனால் இனி செந்தில் பாலாஜிக்கு கனவிலும் ஜாமின் கிடைக்காது என்பது தெளிவாக உறுதியாகி இருக்கிறதாம்.

மணிஷ் சிசோடியா வழக்கிலாவது சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததை அமலாக்கதுறை மற்றும் சிபிஐ கண்டறிந்தது ஆனால் செந்தில் பாலாஜி வழக்கில் அவரே நீதிமன்றத்தில் ஊழலாக பெற்ற பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என தெரிவித்து இருப்பதுடன், செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கு மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டு இருப்பதால் செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் இனி செந்தில் பாலாஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு மூத்த வழக்கறிஞர் நேரடியாக குறிப்பிட்டு விட்டாராம்.

எனவே   நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இனியும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் தொடர அனுமதித்தால் அது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மட்டுமல்ல இந்திய அளவில் திமுக இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணிக்கு எதிராக முடியும் என்பதால் செந்தில் பாலாஜியை தீபாவளிக்கு பிறகு அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்து இருக்கிறாராம் ஸ்டாலின்.

இது ஒருபுறம் என்றால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கதுறை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது போன்று முதல்வர் ஸ்டாலினுக்கு மெட்ரோ ஊழல் குற்றசாட்டில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டி சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் என்ன செய்வது என்ற தீவிர ஆலோசனையில் இறங்கி இருக்கிறதாம் திமுக வழக்கறிஞர் குழு.