24 special

இனி தப்பிக்க முடியாது சரணடைந்த மஹுவா மொய்த்ரா... அம்பலமாகும் பல வேலைகள்...

bjp pm modi
bjp pm modi

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கும், அதானி போன்ற தொழில் அதிபர்களை பாஜகவுடன் வைத்து பல தகவல்களை பரப்புவதற்கும் மஹுவா மொய்த்ரா செய்த காரியம் தான் தேசிய அரசியலை உலுக்கி வருகிறது.நாடாளுமன்றத்தில் மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்குகிறார், மேலும் அவர் செய்யும் சில வேலைகள் விதிமுறைகளுக்கு புறம்பாக இருக்கின்றன என்பது போன்ற பல உண்மைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ரா பற்றி குறிப்பிட்டிருந்தார் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே...இது தொடர்பாக மக்கள் அவை சபாநாயகர் ஓம் பிர்லாவிர்கு அவர் ஒரு புகார் கடிதம் அனுப்பினார். அந்த புகார் கடிதத்தில் 'அதானி குடும்பத்தை குறி வைத்து கேள்வி எழுப்புவதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். 


மேலும் இந்த குற்றச்சாட்டில் ஆதாயம் இருப்பதாக கூறி நாடாளுமன்ற ஒழுங்கு குழு விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் உத்தரவிட்டார், இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் டெஹெத்ராய் மற்றும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ஆகியோர் வாக்குமூலத்தை நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனிடம் மஹுவா மொய்த்ரா தொடர்பு குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன, தர்ஷனிடம் மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் உபயோகப்படுத்தும் மின்னஞ்சல் மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்ததாகவும், அதன் காரணமாக சர்ச்சையான கேள்விகளை நாடாளுமன்றம் நடக்கும் சமயத்தில் மஹுவா மொய்த்ராவுக்கு தர்ஷன் வெளியில் இருந்து அனுப்பியதாகவும் பல குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்கள் பகிரங்கமாக வெளிவந்தது. 

நாடாளுமன்றத்தில் மஹுவா மொய்த்ரா செய்த சில்லறை வேலைகள் அம்பலம் ஆகிவிட்டது, இனி அவர் அவ்வளவுதான் என்பது போன்ற விமர்சனங்களும் தேசிய அரசியலில் எழுந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அக்டோபர் மாதம் 31ம் தேதி அன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது, ஆனால் ஏற்கனவே 'எனக்கு வேலைகள் இருக்கிறது என்னால் ஆஜராக முடியாது' எனக் கூறி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு மஹுவா மொய்த்ரா அலட்சியமாக கடிதம் எழுதியிருந்தார். 

அதன் பிறகு அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு 'நவம்பர் இரண்டாம் தேதி வரை அவகாசமாளிக்கிறோம், அதற்குள் நீங்கள் ஆஜராக வேண்டும் அதற்கு மேல் அவதாரம் அளிக்க முடியாது' என எச்சரிக்கையுடன் கூறிவிட்டது. இந்த நிலையில் இப்படி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு கண்டிப்பாக சொல்லிவிட்ட காரணத்தினால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நவம்பர் இரண்டாம் தேதி ஆஜராக ஒப்புக்கொண்டார்.  அது மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனையும் விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் மஹுவா...

இதற்கு முன்பு பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க மஹுவா மொய்த்ராவிற்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தன் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் மஹுவா மொய்த்ராவிற்கு பல லட்சம் செலவு செய்து பல வெளிநாடுகளை சுற்றி பார்க்க அனுப்பியதையும் தர்ஷன் ஹிராநந்தன் கூறியதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவரை விசாரிக்க வேண்டும் என மஹுவா மொய்த்ரா கேட்டுள்ளார். மஹுவா மொய்த்ரா மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரது எம்.பி பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது, குறுகிய காலத்தில் தேசிய அளவில் பிரதமர் மோடியை எதிர்த்து முன்னுக்கு வர வேண்டும் என நினைத்த மஹுவா மொய்த்ரா தற்பொழுது எம்பி பதவியே பறிபோகும் அளவிற்கு வந்து நிற்பது குறித்து தேசிய அளவில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.