மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்து இருந்தது. ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. ஆனால் பொன்முடி இவ்விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக கே.பாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் ஆளுநர் செல்லும் போது அப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில கருப்பு கொடி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தது.
இதற்கிடையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமா மதுரை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு நாகமலி புதுக்கோட்டை என்ற பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுமார் 50க்குமேற்பட்டோர் கருப்பு கோடி ஏந்தி போராடட்ம் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை களைந்து செல்ல அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பியதால் போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது சேஹ அனைவரையும் தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர். ஆளுநர் விழாவை முடித்த பிறகே அவர்களை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.