செந்தில் பாலாஜி மனைவி செய்த மிகப்பெரிய தவறு! சிக்கலாகும் செந்தில் பாலாஜி வழக்கு! சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் அரசு பங்களாவில் 17 மணிநேர சோதனையை அமலாக்கத்துறை முடித்த பிறகு விசாரணை மேற்கொள்வதற்காக அவரை கைது செய்தனர். ஏராளமான அதிகாரிகளுடன் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜியின் வீட்டில் அவரை கைது செய்ய முற்படும்பொழுது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி அழுது கதறி வாகனத்திற்குள்ளே படுத்துக்கொண்டு அழுது புரண்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். செந்தில் பாலாஜியின் இந்த உடல்நிலை சரிவிற்கு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து கொடுத்த மன உளைச்சலை காரணம் என்று திமுகவினர் தங்கள் தரப்பில் கூறி வந்தனர். இருப்பினும் காலை வரை ஆரோக்கியமாக நடைபயிற்சி மேற்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் பொழுதும் திடமாக இருந்துவிட்டு கைது செய்யப்படும் பொழுது மெமோவை வாங்க மறுத்து பிறகு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியது அமலாக்க துறையினருக்கு அதிர்ச்சியாகவும் சந்தேகத்தை எழுப்பும் விதமாகவும் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அந்த சமயத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது, அப்பொழுது காரசாரமாக இருதரப்பு விவாதங்களும் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா காணொளி வாயிலாக ஆஜரானார், செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் என் ஆர் இளங்கோ வாதிட்டார். துஷார் மேத்தா, ஒருவரை கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை என்றால்தான் ஆட்கொணர்வு மனு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியும் தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் நீதிமன்ற காவலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூற முடியாது இதனால் இந்த மனு தற்போது விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் விசாரணைக்கு உகந்தது என்றும், சட்டப் பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் கைது செய்யப்படுகிறார் என்ற தகவலையும் ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தெரிவிக்க வேண்டியது அடிப்படை உரிமை. இதற்காக அம்பேத்கார் அரசியல் சாசன சட்டத்தில் 15ஏ பிரிவை சேர்த்துள்ளார் என்று என் ஆர் இளங்கோ தனது வாதத்தை முன் வைத்தார். இப்படி தொடர்ந்து தங்களது வாதங்களை ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்தனர். இறுதியில் ஆட்கொணர்வு மனுவுக்கு மீறிய வாதங்களை முன்வைக்க முடியாது , வழக்கை ரத்து செய்ய கூறும் மனுவில் உள்நோக்கம் என்ற காரணத்தை குறிப்பிடலாம் என்று அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி மனைவி தரப்பு, 2014 - 15 இல் நடந்த குற்றங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கிறது என்று வாதித்தது.
இரு தரப்பு வாரத்தையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இந்த தரப்பின் வாதங்களின் விசாரணையை ஜூன் 27 ம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தனர். தற்பொழுது செந்தில்பாலாஜி வழக்கை அமலாக்கத்துறைக்கு சாதகமாக மாற்றப்போவதே இந்த ஆட்கொணர்வு மனுதான் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள், காரணம் ஆட்கொணர்வு மனுவை வைத்தே செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்கை நகர்த்த முடியும் எனவும் செந்தில்பாலாஜியை விசாரிக்க விடாமல் தடுக்கவே நடவடிக்கை எனவும் அமலாக்கத்துறை எடுத்துச்செல்ல இருக்கிறது. செந்தில் பாலாஜி காப்பாற்றுவதற்காக நினைத்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த அவரது மனைவி அந்த ஆட்கொணர்வு மனுவின் காரணமாகவே செந்தில் பாலாஜியின் வழக்கில் சிக்கல் மற்றும் ஆபத்து ஏற்படபோகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.