24 special

அடுத்ததாக திமுக அமைச்சர் அனிதா வழக்கில் என்ட்ரி கொடுத்த அமலாக்கத்துறை...!

Enforcement,anitha ramakrishnan
Enforcement,anitha ramakrishnan

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது பீகார் தலைநகர் பாட்னாவில் குவிந்து இருக்கின்றனர், முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினமே பாட்னா சென்று இன்றுநிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.


இந்த நிலையில் பீகாரில் இருக்கும் ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக் நியூஸ் ஒன்று சொல்லப்பட்டு இருக்கிறது, அது மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழக்கில் அமலாக்க துறை என்ட்ரி ஆகியிருக்கும் தகவல் பற்றியது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 இல் தொடர்ந்த வழக்குதான் இது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது  அமலாக்கத்துறை சார்பில், ‘இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியுள்ளது மேலும் அனிதாவை விசாரணைக்கும் அழைத்திருந்தது அமலாக்கத்துறை.

இந்த நிலையில்தான்… ‘சொத்துக் குவிப்பு வழக்கு  அமைச்சர் மீது நடக்கிறது. இந்த வழக்கை நடத்தும் தமிழ்நாடு அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காப்பதில்தான் அக்கறை செலுத்துகிறது. எனவே பிராசிகியூஷன் முறையாக நேர்மையாக நடக்க வேண்டும். அதனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்புக்கு உதவ விரும்புகிறோம்.  assist prosecution என்ற வகையில் அமலாக்கத்துறையை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஏப்ரல் 19 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு செய்தது அமலாக்கத்துறை.

இதற்குப் பிறகு இவ்வழக்கு நேற்று, ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் உட்பட சிலர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அரசுத் தரப்பு சாட்சிகள் 5 பேர்  விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மூலமாக  ஐந்து ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.  சாட்சிகள் விசாரணை முடிந்ததும் வழக்கை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையும் பிராசிகியூஷனுக்கு அனுமதிக்கப்பட்டால்…  மற்ற அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் அமலாக்கத்துறை  நுழையும் நிலை ஏற்படலாம்.  அனிதா வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை  19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்றோ அதற்கு முன்போ அமலாக்கதுறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது அப்போதைய திமுக அரசு தொடர்ந்த ஊழல் வழக்கில் என்ட்ரி ஆகலாம் என்பதால் இப்போது பல அமைச்சர்கள் கதி கலங்கி போய் இருக்கிறார்களாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையில் இருந்து தப்பிக்க மருத்துவமனையில் நெஞ்சு வழி என அட்மிட் ஆகியிருக்கும் நிலையில் மேலும் பல திமுக அமைச்சர்கள் மீது கடந்த திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் பல அமைச்சர்கள் பதவி இழக்கும் அபாயம் உண்டாகி இருப்பதால் அடுத்து என்ன செய்வது என ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறதாம் ஆளும் திமுக வட்டாரங்கள்.

இதில் முக்கிய திருப்பம் என்ன என்றால் செந்தில் பாலாஜியாகட்டும், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகட்டும்இருவரும் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த போது அவர்கள் ஊழல் செய்து இருக்கிறார்கள் என வழக்கு தொடர்ந்தது திமுக, தற்போது இருவரும் திமுகவில் இருக்கும் நிலையில் அவர்களை காப்பாற்ற அதே திமுக அரசு முயன்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.