Cinema

தளபதி 68ல் யுவன் ஷங்கர் ராஜா செய்த சம்பவம்...தளபதிக்கே இப்படி ஒரு சிக்கலா?

Vijay, Yuvan Shankar Raja
Vijay, Yuvan Shankar Raja

விஜய் - வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.மேலும் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். விஜயின் லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் அடுத்த படத்தை நோக்கி செல்லும் விஜய் தற்போது பிசியாக தளபதி 68ஐ நோக்கி பயணம் செல்கிறார். இப்போது அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒரு கிடுக்குபிடி கொடுக்ப்பதாக இணையத்தில் ஒரு தகவல் உலா வர தொடங்கியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல் அமைத்தாலே படம் ஹிட் ஆகும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. என்னதான் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் ஷங்கர் அவருக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை. அவருக்கு பதிலாக அனிருத் தான் தற்போது இசையமைப்பதில் கிங்ஆக மாறி வருகிறார். மெலடி கிங், காதல் தோல்விக்கு சரியான போதை அது யுவன் என்று பெயர் வாங்கியிருக்கும் அவர் மீது ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் இதில் இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணி புதிய கீதை படத்தில் இணைந்தது. ஐதன் பிறகு விஜயுடன் யுவன் இணையவில்லை அனிருத் தான் தற்போது விஜ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் வெங்கட் பிரபு என்றால் அவருக்கென்று ஒரு திரை பட்டாளம் மற்றும் இசையமைப்பாளர் இருப்பார் அப்படி தான் யுவனும். இந்த  நிலையில் யுவன் சங்கர் ராஜாவை பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே தான் இசையமைக்கும் படங்களுக்கு அவ்வளவு எளிதாக பாடல்களை கொடுக்க மாட்டார் என அவர் மீது ஒரு அதிருப்தி இருந்து வந்தது. இதில் கூடுதலாக அவர் துபாயிலேயே செட்டிலாகிவிட்டாராம். அவரது மாமனார் ஒரு பெரிய் தொழிலதிபராம். அதனால் மனைவியுடன் அங்கேயே தங்கிவிட்டாராம். 

படம் சம்பந்தமாக ஸ்கைப்பிலேயே தான் பேசி வருகிறாராம். ரீ ரிக்கார்டிங் கூட ஆன் லைனிலேயே அனுப்பி விடுகிறாராம். சில சமயம் ஒரு சில இயக்குனர்கள் ரீ ரிக்கார்டிக்கிற்காக துபாய்க்கே செல்ல வேண்டியிருக்கிறதாம். அங்கேயே ரிக்கார்டிங்கையே முடித்து கொடுத்தனுப்புகிறாராம் யுவன். இது மற்ற படங்களுக்கு சரி. ஆனால் கோலிவுட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தில் இருக்கும் விஜய் படத்திற்கு எப்படி சாத்தியமாகும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள். மேலும், அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்து வரும் விஜய் தற்போது யுவன் ரிவென்ஜ் எடுத்துவருவதாகவும் இணையவாசிகள் கூறுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தளபதி 68 முதல் சிங்கிள் கிருஸ்துமஸ் அன்று வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.