கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் சோதனையின் பிடியில் சிக்கியது முதல் குற்ற பிரிவு அதிகாரிகளின் சம்மன் வரை அவர் வழக்கில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்த நிலையில் செந்தில் பாலாஜி தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதி பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகிய இரு நீதிபதிகளின் தலைமையில் நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் மீது எடுத்த நடவடிக்கை முறையானது அல்ல என்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மேத்தா செந்தில் பாலாஜியின் மருத்துவமனையில் இருக்கும்போது அதை நீதிமன்ற காவலாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தையும் முன்வைத்த நிலையில் நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தீர்ப்பையும், அமலாக்கத் துறைக்கு ஆதரவாக நீதிபதி பரத சக்கரவர்த்தி இந்த வழக்கை செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பளித்தார்.இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்ட நிலையில் இருந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜியை சுற்றி வளைத்த நிலையில் ஏன் முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்கு இவ்வளவு பாடுபடுகிறார் என்ற கேள்வி திமுக கட்சிக்குள்ளே எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சவுக்கு வலைத்தளத்தில் கட்டுரையாக வெளியிட்டது அரசியல் ரீதியாக சலசலப்பை கிளப்பியுள்ளது. 'ஐந்து கட்சிகள் மாறிய செந்தில் பாலாஜிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? என்கிற ரீதியில் சவுக்கு சங்கர் நிறைய கேள்விகள் எழுப்பியுள்ளது வெளி கட்சியினர் மட்டுமல்லாது திமுகவிற்குள்ளே முணுமுணுக்கும் பேச்சுக்களை எழுப்பியுள்ளன.
மேலும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் இவ்வளவு முயற்சியில் ஈடுபடுகிறார்? இதன் பின்னணி என்ன? முதல்வரின் பயம் என்ன என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் ஆதாரங்கள் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் கூறியதும், முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை காப்பாற்ற முனைவதற்கும் சவுக்கு சங்கர் கூறிய முக்கிய காரணங்களும் சலலசப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்காவிட்டால் அவர் முதலமைச்சர் செய்த ஊழலை அமலாக்கத்துறையிடம் காட்டிக் கொடுத்து விடுவார். மேலும் திமுக கட்சியில் பல மூத்த தலைவர்களின் சிந்தனையும் அமைச்சர் செந்தில் பாலாஜியால் திமுக கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் எந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செந்தில் பாலாஜியை காப்பாற்ற நினைக்கிறார் என்று தங்களுக்குள்ளேயே முணங்கிக் கொள்கின்றனர்' எனவும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவை காவு கொடுக்கப் போகிறார், செந்தில் பாலாஜியின் வழக்கு திமுகவிற்கு எதிராக அமையும் என்று சவுக்கு சங்கர் தனது கட்டுரை பதிவில் குறிப்பிட்டுள்ளார்,. இவ்வாறு சவுக்கு சங்கர் தனது பதிவை இணையத்தில் வெளியிட்டதால் செந்தில்பாலாஜி விவகாரம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.