நமது நாட்டில் உள்ள குடிமக்களுக்கு தனிநபர் உரிமைகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரவில்லை அவை ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளை பின்பற்றுவது தற்போது வரை நடைமுறையில் உள்ளது. நமது நாட்டில் நடத்தப்படும் திருமணம், விவகாரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபர் பிரிவுகள் அனைத்துமே அந்தந்த மதத்திற்கு ஏற்ற மாதிரியான வழிமுறைகளை கொண்டுள்ளது அந்தந்த மதங்களுக்கான சட்டங்களே நிறுவப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆதலால் இச்சட்டத்தை மாற்றி அனைத்து மக்களின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே பொது சிவில் சட்டம்! இச்சட்டத்தையே 2014 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சில தரப்புகளிடமிருந்து பொது சிவில் சட்டம் வரவேற்பை பெற்றாலும் சில தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகளை இச்சட்டம் பெற்று வருகிறது இந்நிலையில் பொது சிவில் சட்டம் பற்றி தங்களது கருத்துகளை மத்திய அரசிடம் தெரிவிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி உடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி போட்டு தேர்தலை எதிர்கொள்ள இருக்கிற அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது போன்ற கருத்தை முன் வைத்துள்ளார். பிறகு மொத்த அதிமுகவும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் 20 ஆண்டு காலத்திற்கு முன்னரே முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பொது சிவில் சட்டத்தை ஆதரித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்துள்ளார் என்ற வரலாற்று தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தினால் அதிமுக அதற்கு முழுவதுமாக ஆதரவு கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா ஒரே மாதிரியான சிவில் சட்டம் நாடு முழுவதும் கொண்டுவரப்படுவது இந்த நேரத்திற்கு முக்கியமானது, முழுவதுமாக அதை நான் ஆதரிக்கிறேன் பொது சிவில் சட்டம் அவசியமான ஒன்று இச்சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்த ஒரு பாதிப்பும் நிகழாது அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படுவதற்கான வழியை இச்சட்டம் ஏற்படுத்தி தரும் என்று கூறி இருந்துள்ளதாக வெளியான செய்தி துண்டு பிரசுரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது இச்சட்டத்தை அதிமுக முழுவதுமாக எதிர்க்கிறது என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார் ஆனால் அனைத்து தமிழக மக்களாலும் போற்றப்பட்ட ஆதரிக்கப்பட்ட ஜெயலலிதா அம்மாவின் கருத்து பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவே இருந்துள்ளது! அம்மாவின் வழியில் தான் நடப்போம் எம் ஜி ஆரின் வழியில் தான் கட்சியை கொண்டு செல்வோம் என்று கூறிவிட்டு தற்போது ஜெயலலிதா அவர்கள் ஆதரித்த கருத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர் அதிமுகவினர் என்று அக்கட்சியின் தொண்டர்களுக்கிடையே குழப்பங்கள் எழுந்துள்ளது, ஜெயலலிதாவை மறந்து, அவரது விருப்பத்தை மறைத்து தற்போது மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிச்சாமி தவறு செய்து விட்டார் என பலவிதமான பேச்சுகள் அடிபடுகின்றன.