கடும் நெருக்கடி, துரத்தும் துறைகள் என சிக்கலில் இருக்கும் நிலையில் அப்ரூவர் ஆகிறாரா செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் என வெளிவந்த தகவலால் செந்தில் பாலாஜி மட்டுமல்ல செந்தில் பாலாஜியை தற்போது வரை அமைச்சரவையில் வைத்து இருக்கும் திமுக அரசிற்கும் பெரும் சிக்கல் உண்டாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ரெய்டு செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் நடைபெற்று பல ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் மோசடி செய்த வழக்கில் குற்றப்பிரிவு அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பினர் .
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரது தம்பி அசோக் என்பவருக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை . அசோக் தலைமறைவு ஆகிவிட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அசோக் ஆஜராகாததால் தற்போது மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகளால் சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர் .
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் வருமானவரித்துறை ரெய்டு மற்றும் அவரது தம்பியின் தலைமறைவு சமூக வலைதளங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபல தனியார் யூடியூப் சேனல் சவுக்கு சங்கரை நேர்காணல் செய்ததில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நேர்காணலில் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியவில்லை இதற்கிடையில் சோதனையின் மையப் புள்ளியாக விளங்கிய செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தலைமறைவாகி உள்ளார். மேலும் செந்தில் பாலாஜி காப்பாற்ற திமுக கட்சியினர் போராடி வரும் நிலையில் அவரது குடும்பம் அவருக்கு ஆதரவாக இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது..
மேலும் செந்தில் பாலாஜியை அரசு காப்பாற்ற வில்லை என்றால் கண்டிப்பாக அசோக் அப்ரூவர் ஆவார். அதுமட்டுமில்லாமல் அசோக் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் ஏர்போர்ட்டில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது . மூன்று நாட்களுக்கு முன்பாக கரூர் மாவட்டம் செக்போஸ்ட் அருகே அசோக் அவரது பினாமி ஷங்கரை சந்தித்து பேசியதாக திடுக்கிடும் தகவலையும் அவர் தெரிவித்தார் இதனால் அசோக் ஊருக்குள் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார் வெளிநாடு செல்லவில்லை என அவர் கூறியதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அசோக் பயன்படுத்தும் செல்போன் நம்பர் அமலாக்ககத்துறை வசம் சிக்கி உள்ளது. அவர் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றுவதால் அவரை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் வரும் செவ்வாய்க்கிழமை வரை காத்திருங்கள் என்று பரபரப்பு செய்தியை சவுக்கு சங்கர் கூறினார், செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்தது தவறு போன்ற வாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில் அமலாக்கத் துறை தரப்பு வாதத்தை எடுத்துரைத்து வாதிட்ட வழக்கறிஞர் எனக்கு திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்று கூறியதாகவும் இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் எனக்கு செவ்வாய்க்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்று கூறியதால் செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்கும் நிலைஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் செந்தில் பாலாஜிக்கு உண்மையிலேயே உடலில் பிணி இருக்கலாம் ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் அமலாக்கத் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமலாக்க துறையினரின் மருத்துவக் குழு செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்வதாகவும் , வெறும் மருத்துவர் கொடுக்கின்ற சான்றிதழை வைத்து மட்டும் நம்பி விட முடியாது என்றும். செந்தில் பாலாஜி என்று பூரண சுகம் அடைகிறாரோ அன்று அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுக்கும் என்ற தகவலையும் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.
இப்படி செந்தில்பாலாஜியின் வழக்கில் முக்கிய நபராக பார்க்கப்படும் அவரது தம்பி அசோக்குமார் அப்ரூவராக மாற வாய்ப்பிருப்பதாக சவுக்கு சங்கர் சில தகவல்களை கூறியிருப்பது பல அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது!