24 special

வசமாக சிக்கிய செந்தில்குமார்!! எல்லாம் இதுக்குத்தானா?

MP SENTHILKUMAR
MP SENTHILKUMAR

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் நின்று தர்மபுரி மாவட்டத்தில் வெற்றி பெற்று எம்பியாக  பதவியேற்றார். செந்தில்குமாரின் தாத்தா தான் தர்மபுரி மாவட்டமும் சேலம் மாவட்டமும் தற்போது தனித்தனியாக இருப்பதற்கு காரணம் என்று கூறுகின்றனர். அளவுக்கு செல்வாக்கான ஒரு குடும்பத்தில் பிறந்து அரசியலில் ஆர்வம் கொண்டு இருந்ததால் இவருக்கு திமுகவில் இவருக்கு சீட்டும் வழங்கியுள்ளனர். என்னதான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் கூட எம்பி ஆனதற்கு பிறகு இவரை நடவடிக்கைகள் கொஞ்சம் சரி இல்லாமல் இருந்த வந்தது. இவரின் கவனத்தையும் இவர் மீது ஈர்க்க வேண்டும் என்று இவர் செய்த பல காரியங்கள் சர்ச்சையில்தான் முடிந்தது. தொடர்ந்து பல மேடைகளிலும் இவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையில் முடியும் நிலையில் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சையில் மாட்டினார் எம்பி செந்தில்குமார். கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜூலை மாதம்  இவரின் பகுதியில் ஏரி ஒன்றினை புனரமைக்கும்  பணியினை துவங்கி வைக்க  நிலா ஒன்று நடத்தப்பட்டது. அதனை துவங்கி வைப்பதற்காக  செந்தில் குமார் அந்த இடத்திற்கு வந்து அங்கு இருந்த கேமராக்கள் மத்தியில் அங்கு வந்தார்.


அப்போது அங்கு பூமி பூஜை செய்வதற்கு தயாராக அனைவரும் இருந்த நிலையில் செந்தில்குமார் அதனை பார்த்துவிட்டு என்ன இது!! அரசு விழாவில் இது போன்று இந்து மதத்தை பின்பற்றி மட்டும் பூஜை நடத்துவதை எதிர்த்து அந்த விழாவில் இருந்த அரசு அதிகாரிகளையும் கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்று  மதங்களை பின்பற்றும்  விழாக்களுக்கு என்னை அழைக்காதீர்கள் என்றும் கூறியிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பேசிய வீடியோ வைரலாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதியமான் கோட்டை வளாகத்தில் நூலகம் கட்டுமான பூஜையில் அங்கு இருந்த செங்கலில் குங்குமப்பூவும் பொட்டு வைத்திருப்பதை பார்த்து மிகவும் கடுப்பான செந்தில் குமார் அந்த கல்லினை திருப்பி வைத்து அங்கு இருந்த பூக்களை எல்லாம் அகற்றி விட்டு அதன் பிறகு பூஜையை செய்ய வைத்தார். இது பொதுமக்கள் பெரும் வெறுப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்தது. இது போன்று தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் மாட்டி வந்ததால் கலை நிகழ்ச்சிகளில் எம்பி செந்தில் குமாரை அழைப்பதை பலரும் நிறுத்தி வந்தனர். மேலும் பேட்டியில் சிவன் பார்வதி குறித்து ஒரு சர்ச்சையான கருத்தினை தெரிவித்து இருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி அதன் பிறகு அதிக அளவில் இவரை வெறுக்க தொடங்கினர். 

இப்படி தொடர்ந்து தனது வாய் கொழுத்தினால் பல சரித்திரங்களில் மாற்றி வந்த செந்தில்குமார் தற்போது சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை இழந்தார். இந்த நிலையில் இந்து மதத்தை பின்பற்றி நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அவதூறாக பேசி வந்த செந்தில்குமார் தற்போது தனது இல்லத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியினை இந்த முறைப்படி குடும்பத்துடன் செய்துள்ளார். அதாவது தான் பதவியில் இருக்கும் பொழுது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்து முறைப்படி நடந்த நிகழ்ச்சிகளை நடக்க விடாமல் செய்து அதனால் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த  செந்தில்குமார் தற்போது சமீபத்தில் இடைக்காட்டூர் கோவிலில் இந்த முறைப்படி தனது இல்லத்தின் விசேஷத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வந்துள்ளார். இவ்வாறு ஹிந்து முறைப்படி நடக்கும் விசேஷங்களையும், ஆன்மீகத்தையே புறக்கணிக்கும் விதமாக நடந்து வந்த செந்தில்குமார் தற்போது இது போன்ற பூஜையை செய்து இருப்பது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரலாகி படும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. மேலும் இந்த தேர்தலில் சீட் கேட்டு கொடுக்காத காரணத்தினால்தான் செந்தில்குமார் இப்படி திமுக சித்தாந்த எதிப்பு வேலைகளிலும் இறங்கியுள்ளார் என அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகிறது...