கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் படம். படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து மூன்றாம் பக்கமும் இந்த 2ம் பாகம் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாக தகவல் வந்து கொண்டு இருக்கிறது.
மேலும், படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் ஒருவர் எதிர்பாராத விபத்தில் மரணித்தார். இதனால் இப்படம் தொடங்கியுயதும் பல நெகட்டிவ் விமர்சனம் பெற்றது. அதன் பிறகு, கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையே மோதல் ஏற்படத்தால் படம் தயாரிக்க தள்ளிபோனது.இந்நிலையில் இருவரும் சமதமாகி படத்தை எடுக்க ஆரம்பித்தனர். இந்தியன் 2 பட வேலைகள் நடைபெறும் வேலையில் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் எடுக்க தொடங்கினார். ஒரே நேரத்தில் 2 படத்தையும் எப்படி எடுக்கிறார் என்ற கல்வியும் எழுந்தது.
இதனால் இந்தியன் 2 படத்தில் எதாவது பிசிறி தட்டிவிட போகுது என்று ரசிகர்கள் ஷங்கரிடம் கோரிக்கை வைத்தனர்.ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ ஆகிய இரண்டு படங்களுமே 2024ம் ஆண்டு வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் ’இந்தியன் 2’ பாகத்தை ஏப்ரல் 12ஆம் தேதியும் ’இந்தியன் 3’ பாகத்தை அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளகவும் தகவல் வந்து கொண்டு இருக்கிறது.இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழில் நடிகர் ரஜினிகாந்தும், இந்தியில் அமீர்கானும், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் ராஜமெளலி மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளனர்.
இந்த இன்ட்ரோ வீடியோவை பார்க்கும்போது 'கமல்ஹாசன் எங்கு தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் அதை தட்டி கேட்க வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது என்று போனில் பேசுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. அனிருத்தின் இசை படத்திற்கு அருமையாக அமைந்துள்ளது என்பதை படத்தின் இன்றோ வீடியோவில் கட்சிதமாக தெரிந்திருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் நடக்கும் ஊழலை' வெளிச்சத்திற்கு கொண்டு வரும் கதைக்களமாக உள்ளது.