
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராமர் கோவிலின் புகழை பரப்புவதற்காக பக்தர்கள் பெருமளவில் பாதயாத்திரை மேற்கொண்டனர். அதிலும் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுமார் 4000 கிலோமீட்டர் அதிகமான பாதயாத்திரை சென்று ராமரின் செய்தியை பரப்பும் பக்தர் ஒருவர் இருக்கிறார்!! அவர்தான் ஷிப்ரா பதக் இதற்கு முன்னரே, ஷிப்ரா புனித நர்மதை உட்பட பல நதிகளை வலம் வந்ததால், 'நீர் பெண்' என்ற பட்டப்பெயர் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து இவரின் பாதயாத்திரை பயணம் மிகவும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் மதுரையை வந்தடைந்தார். அயோத்தியில் இருந்து மதுரை வரை வெற்றிகரமாக தனது பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து அங்குள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஷிப்ரா பதக் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக வைகை ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் தனது சுற்றுச்சூழல் முயற்சிகளை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தார்.அதன் பின் மேலும் பாதையாத்திரத்தை தொடர்ந்தார். இதனை ஒட்டி நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை வந்தடைந்தார். அதோடு சிவன் ராத்திரியை முன்னிட்டு அங்குள்ள சிவன் சிவன் கோயிலில் தரிசனத்தை மேற்கொண்டார். பரமக்குடி வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத 8 நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர்கள் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தி அவரது கைகளில் காயங்களை ஏற்படுத்தி, பக்க கண்ணாடிகளை உடைத்து, அவரது குடும்பத்தினரின் காரை குறிவைத்து, ராமர் கொடி தாங்கிய கார் கொடிக் கம்பத்தை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இந்த நபர்கள், தனது ராமருக்கு இடமில்லை என்று கூறி, அயோத்தியை விட்டு வெளியேறுமாறு மிரட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.
சம்பவங்கள் குறித்து உள்ளூர் சிங்காரத்தோப்பு காவல்துறையினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது, மேலும் இந்து ஆர்வலர்களின் உதவியால் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதி செய்யப்பட்டது.திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தின் ஆபத்தான யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த சம்பவம்! மேலும் தமிழக மாநிலத்தில் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் அந்த மர்ம நபர்கள் "Go back rammar" என்ற முழக்கத்தை கூறினார்கள் என்றும் அதன்பின் இவ்வாறு தாக்கினார்கள் என்றும் ஷிப்ரா பதக் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் கூறுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இச்சம்பகத்திற்கு பிறகு அதன்பின் அப்பெண் தனது பாதையாத்திரத்தை தொடர்ந்தார். இது அந்த இடத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாதயாத்தில் செல்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.. இச்செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக தமிழகத்திற்கும் அயோத்திக்கும் இருக்கும் தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் திறப்பு விழாவிற்கு முன்பு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிரூபித்தார். மேலும் அந்த நேரத்தில் பல பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு பயணம் மேற்கொண்டனர். அப்படி ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு பல பக்தர்கள் சென்ற நிலையில் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நடை பயணம் மேற்கொண்ட ஒரு இளம் பெண்ணிற்கு இதுபோன்ற தாக்குதல் நடத்திருப்பது இதுவரை எங்கும் நிகழாத சம்பவமாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.மேலும் இந்த பெண் கூறியதில் உண்மை இல்லை எனவும் கூறி காவல்துறையினர் அந்த பெண் மேல் வழக்கு பதிவு செய்திருப்பது வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....