24 special

கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு..!

karthik chidambaram
karthik chidambaram

புதுதில்லி : முன்னாள் மத்திய நிதியமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ப.சிதம்பரம் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல ஊழல்கள் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் ஏர்செல் மேக்சிஸ் போன்ற சிலவழக்குகளில் நேரடியாக தொடர்பிருப்பது உறுதிசெய்யப்பட்டு திஹார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் ப.சிதம்பரம் வாரிசான கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு சொந்தமான இடமாக கருதப்படும் ஏழு இடங்களில் காலையில் இருந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்திவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கார்த்தி சிதம்பரம் கடந்த 2018 பிப்ரவரியில் கைதுசெய்யப்பட்டு 2018 மார்ச்சில் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், டெல்லி, சென்னை, சிவகங்கை மும்பை உள்ளிட்ட ஏழு இடங்களில் காங்கிரசின் மூத்த தலைவரான சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திவருகிறது. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் தொடர்பான ரெய்டு இது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைத்த தகவல்களின்படி புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஒரு மின்திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்தம் அளித்துள்ளார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் தனது தந்தை சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ரூபாய் 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றதாக ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு FIPP அனுமதி வழங்கிய விவகாரம் உட்பட பல வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் மே 15 2017ல் சிபிஐயால் வழக்கு பதிவுசெய்யப்பட்டு 2018ல் கார்த்தி கைதுசெய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.