Politics

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது!!

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது!!
ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது!!

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மீது இருக்கும் குற்ற வழக்குகள் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது, பாமக சார்பில் வழக்கறிஞர் பாலுவும் திமுக சார்பில் ksk கண்ணன் என்பவரும் போட்டியிடுக்கின்றனர், பாமக வேட்பாளர் பாலுவை பொறுத்தமட்டில் வழக்கறிஞராக 8 வழி சாலை போராட்டம் உட்பட மக்கள் பிரச்சனைகள் பலவற்றில் முன்னின்று போராடியவர்,சட்ட போராட்டம் நடத்தியவர் என்பது தொகுதியில் பலருக்கும் தெரிந்துள்ளது.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் KSK கண்ணன் மக்களுக்கு என்ன சேவை செய்தார் என  பாமக வேட்பாளருடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சிதான் மிஞ்சியுள்ளது,  திமுக வேட்பாளர் மீது 21 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் அவை இந்திய தண்டனை சட்டத்தின் முக்கிய பிரிவுகளின் கீழ் இருப்பதும் தெரியவந்துள்ளது.

2009-ம் ஆண்டு முதல் தற்போதுவரை திமுக வேட்பாளர் கண்ணன் மீது அரியலூர் மாவட்டம் T.பலூர் மற்றும் மீன் சுருட்டி காவல்நிலையத்தில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இவற்றில் பொது சொத்துக்களை நாசம் செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொரோனா பேரிடர் காலத்தில் கூட மக்களின் அன்றாட வாழ்வை கேள்வி குறியாக்கும் விதமாக போராட்டம் நடந்துதல் இன்னும் பல குற்ற வழக்குகள் திமுக வேட்பாளர் மீது நிலுவையில் உள்ளன.

இந்திய தண்டனை சட்டம் 143, 188, 270, 269,271,285, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் திமுக வேட்பாளார் மீது குற்ற வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் தற்போது பொது வெளியில் பரவி கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது, சட்டமன்ற உறுப்பினர் என்பவர் தொகுதி மக்களுக்கு சேவை செய்பவறாக இருத்தல் வேண்டும்.

ஆனால் திமுக வேட்பாளரோ பொறுப்பிற்கு வருவதற்கு முன்பே 21 குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் என வழக்குகள் என்றால், நாளை வெற்றி பெற்று MLA ஆனால் மக்களுக்கு சேவை செய்வாரா அல்லது குற்ற நடவடிக்கையில் ஈடுபாடுவாரா என்று தொகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கட்ட பஞ்சாயத்து, ரவுடிசம் போன்ற வழக்குகளில் இருந்து பல குடும்பங்களை காப்பாற்றிய வழக்கறிஞர் பாலு ஒரு புறம் பாமக வேட்பாளர் என்றால், 21 குற்ற வழக்குகளில் தொடர்புடைய கண்ணன் திமுக வேட்பாளர்,  இருவரில் யாருக்கு வாக்கு அளித்தால் ஜெயங்கொண்டம் தொகுதி வாக்காளர்களின் வாழ்கை பாதுகாப்பாக இருக்கும் என்பது வாக்காளர்களான உங்கள் கையில்தான் இருக்கிறது என பாமகவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உங்களின் வாய்ப்பு மக்களோடு மக்களாக நிற்கும் வழக்கறிஞர் பாலுவிற்கா இல்லை 21 குற்ற வழக்குகளில் தொடர்புடைய திமுக வேட்பாளருக்கா முடிவு உங்கள் கையில் எனவும் பிரச்சாரங்களில் பேசியும் வருகின்றனர்.