24 special

பெண்கள் விஷயத்தில் விஜயகாந்த் வெளிவராத தகவல்

vijayakanth
vijayakanth

திரையுலகை பொருத்தவரை அனைத்து வசதிகள் மட்டுமல்லாமல் ஆடம்பரத்திற்கு அனைத்தும் கிடைக்கும் என கூறுவார்கள். சினிமா நடிகர்கள் என்றால் மது, மாது போன்ற விஷயங்களில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையே வேறு மாதிரி இருக்கும். குறிப்பாக பல நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் மோசமாக இருப்பார்கள் எனவும் பல வதந்திகள், கிசுகிசுக்கள், செய்திகள் பலவாறு வெளிவந்த வண்ணம் இருக்கும். ஆனால் இது எல்லாவற்றிலும் விஜயகாந்த் எப்படி என திரையுலகத்தில் சிலரிடம் விசாரித்த பொழுது பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறினார்கள்.1952 இல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரைஸ் மில் முதலாளி மகனாக பிறந்த விஜயராஜ் படிப்பில் நார்மம் இல்லாததால் தனது நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி எம்ஜிஆரின் திரைப்படங்களை பார்ப்பார் அதற்குப் பிறகு எம்ஜிஆர் நடித்தது போன்று நடித்து ஒவ்வொரு காட்சியையும் விளக்கமளிப்பார்.


இதனைத் தொடர்ந்து நடிப்பில் அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதால் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்குப் பிறகு இயக்குனர் காஜாவால் இனிக்கும் இளமை என்ற படத்தில் அறிமுகமான விஜயராஜ், இயக்குனர் காஜாவால் விஜயகாந்த் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இதனை அடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து கேப்டனாக மாறினார். மேலும் 2000 ஆண்டில் பிப்ரவரியில் தனது ரசிகர் மன்றத்திற்கென தனி கொடியே அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார் அதோடு ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதியையும் மாநாட்டையும் அறிவித்தார். அதோடு 2005 ஆண்டில் மதுரையில் தனது கட்சியை தொடங்கினார். 

இவர் அரசியல் வாழ்க்கை தான் ஏற்ற இறக்கமாக இருந்ததே தவிர இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்திலேயே இருந்தது,. இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஹிட் என்றால் மிகப்பெரிய ஹிட் ஆகும், 250 முதல் 300 நாட்கள் வரை ஈசியாக ஓடும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், என் ஆசை மச்சான், செந்தூரப்பூவே, ஊமைவிழிகள், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் எல்லாம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படிப்பட்ட நடிகரின் திரை வாழ்வில் அவரிடம் காதலை வெளிப்படுத்திய நடிகைகள் தான் அதிகம், 80, 90களில் பல கதாநாயகிகள் விஜயகாந்த் பின்னால் சுற்றினார்கள் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக விஜயகாந்த் உடன் நடித்த சில நடிகைகளை பற்றி அவர்கள் குறிப்பிட்டார்கள், அதில் ஒரு சில நடிகைகள் விஜயகாந்தை திருமணம் செய்து கொள்ளவே ஆசைப்பட்டார்கள் எனவும் ஆனால் விஜயகாந்த் அது எல்லாவற்றையும் ஏற்காமல் தானுண்டு தான் வேலை உண்டு என இருந்ததாகவும் கூறுவார்கள். 

அதுவும் தற்பொழுது பிரபல நடிகர் ஒருவர்களை திருமணம் செய்து கொண்டிருக்கும் நடிகை சின்னத்திரையிலும் பெயர் பெற்றவர் அவர் விஜயகாந்தை திருமணம் செய்தாக வேண்டும் என பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். ஆனால் விஜயகாந்த் எனக்கு மனைவி என்றால் அது பிரேமலதா தான் நான் கண்ணியமாக வாழ்ந்து வருகிறேன் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என பலமுறை கூறி நிராகரித்துள்ளார், அது மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்தவுடன் அனைவரையும் சாப்பிட வைத்துவிட்டு பிறகு தான் செல்வாராம் கேப்டன். நடிகைகள் விஷயத்தில் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் விஜயகாந்த் யாரையும் நெருங்காதவாறு! தன்னையும் யாரும் நெருங்கி விடாதவாறு தனித்துவமாக வாழ்ந்து வந்தார் எனவும் வேறு திரையுலக முன்னாள் சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.நடிகர் விஜயகாந்த் தனது திரை வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பெண்களை மிகவும் மரியாதையாகவும் எந்த ஒரு பெண்கள் ரீதியிலான சர்ச்சையிலும் ஈடுபடாதவர். இவரைப் போன்று இவரது மகன்களும் தற்பொழுது எந்த பெண்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் சிக்காமல் கண்ணியமாக தனது தந்தையை போன்று வாழ்ந்து வருகின்றனர் என்று விஜயகாந்த் குறித்தும் விஜயகாந்தின் வளர்ப்பு குறித்த பெருமிதங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.