Cinema

ஏன் எங்களால முடியாதா?... ஷாருக்கான், சால்மான்கான் நடுவில் புகுந்த நட்சத்திர ஜோடி!

Shahrukhan
Shahrukhan

பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதி மும்பையில் சொகுசு வீடு வாங்கியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


பாலிவுட்டின் பிரபலமான ஜோடியும், காதல் தம்பதியுமான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடி சமீபத்தில் தங்களது 4ம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினர். அத்துடன் தங்களது படம் குறித்தும், பர்சனல் வாழ்க்கையில் அரங்கேறும் நல்ல விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான்  தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஜோடி தாங்கள் புதிதாக வாங்கிய அலிபாக் வீட்டில் கிரகபிரவேஷம் செய்தனர்.  அது சம்பந்தமான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்போது மற்றொரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வருவது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்போது, ​​இந்த ஜோடி மும்பையில் உள்ள பிரம்மாண்ட குடியிருப்பான க்வாட்ரப்ளெக்ஸுக்கு மாறுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

மும்பையில் உள்ள பேண்ட்ஸ்டாண்டில் உள்ள சாகர் ரேஷம் என்ற கட்டிடத்தின் 16, 17, 18 மற்றும் 19 மாடிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சுமார் 119 கோடி கொடுத்து ரன்வீர், தீபிகா ஜோடி வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதற்கு பதிவு கட்டணமாக மட்டும் 7 கோடிக்கும் மேலாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பிரபலமான கலைஞர்களைக் கொண்டு இன்டீரியர் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த அடுக்குமாடி குடியிருப்பு பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கானின் மன்னர் பங்களாவிற்கும், சால்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பிற்கும் இடையில் அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் வசித்து வரும் சொகுசு குடியிருப்பு பகுதியில் வீடு தேடி வந்த ரன்வீர், திபீகா ஜோடிக்கு ஜாக்பாட்டாக இந்த வீடு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.