உக்ரைன் நாட்டில் மிக பெரிய தாக்குதல் சம்பவத்தை ரஸ்யா தொடரலாம் என்பதால் இந்தியா தனது நாட்டினரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும் பணியை அவசரமாக தொடங்கியுள்ளது இந்த சூழலில் உக்ரைனில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஸ்டான்லி ராஜன் அது பின்வருமாறு :-
உக்ரைனில் ஏதோ பெரிதாக நடக்க இருப்பதை உலகம் எதிர்பார்க்கின்றது, இந்தியாவும் மிக அவசரமாக அங்கிருக்கும் இந்தியர்களை வெளியேற்ற கடும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது. இந்திய ராணுவத்தின் போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவை அவசரமாக களத்தில் இறக்கபடுகின்றது.
இந்தியாவின் அவசரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ரஷ்யா சுமார் 50 கிமி நீளம் கொண்ட ராணுவ படையணியினை உக்ரைன் நோக்கி நகர்த்துகின்றது, இது ரஷ்யாவின் ராணுவத்தில் 2/3 பங்காகும் உக்ரைனை நோக்கி தன் முழு பலத்தையும் ரஷ்யா காட்ட முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அல்ல என்றாலும் புட்டீன் மிகபெரிய போருக்கு தயாராவது தெரிகின்றது.
உக்ரைன் அதிபரின் கோரிக்கைகளெல்லாம் மேற்குலகால் அவசரமாக செய்யபடும் நிலையில் அது ஐரோப்பிய யூனியன் அமைப்பிலும் அவசரமாக சேர்க்கபட்டாயிற்று, இது பொருளாதார ரீதியாகவும் இதர பாதுகாப்பு ரீதியாகவும் நல்லது
ரஷ்யாவில் உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி மிகபெரிய நகர்வு தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி அல்ல, வாழ்வா சாவா போராட்டத்தில் ரஷ்யா குதித்திருப்பது போல் தெரிகின்றது.
உக்ரைனும் சும்மா அல்ல அதுவும் திகிலை கிளப்புகின்றது , உண்மையான சண்டை இன்னும் தொடங்கவில்லை , ரஷ்யா மட்டுபடுத்தபட்ட தாக்குதலை மட்டும் செய்கின்றது அவர்கள் கோரமுகத்தை காட்டும்பொழுதுதான் நிஜமான சண்டை தொடங்கும் என்கின்றார் உக்ரைன் அதிபர் இந்த போரில் வெற்றி பெறுவது யாரென்றால் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா,
இனி ஐரோப்பிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை அவர்களுக்கானது அப்படியே ரஷ்யாவினை உக்ரைனை கொண்டு கட்டுபடுத்திவிட்டார்கள், தன் வீரர்களில் ஒருவனை கூட இழக்காமல் ரஷ்யாவினை முடக்குகின்றது அமெரிக்கா.
யுத்தத்தில் பலனடையும் இன்னொரு நாடு சீனா, இனி ரஷ்யாவின் பிடி சீனாவுக்குள் செல்லும். ரஷ்யாவின் எண்ணெய்க்கும் இதர விஷயங்களுக்கும் அந்நாடுதான் கைகொடுக்க வேண்டும், சீனா இனி முன்னாள் சோவியத் யூனியன் இடத்தை பிடிக்கும்,இந்த போரில் மிகபெரிய அதிர்ஷ்டம் அடிக்கபோகும் நாடு கத்தார்
ஆம், கத்தாரின் எரிவாயு இருப்பு அமோகமானது, இனி அமெரிக்க கம்பெனிகள் கத்தார் எரிவாயுவினை வியாபராமக்கும் கத்தாரின் பொருளாதாரம் மிக வேகமாக எகிறும், கனடாவுக்கும் அதிர்ஷ்டம் அடித்தாயிற்று
இந்தியாவினை பொறுத்தவரை இந்த போருக்கு முன்னால் செய்த ரஷ்ய ஒப்பந்தங்கள் இந்த எஸ் 400 போன்றவை சிக்கலாகாது அவை வந்துவிடும் ஆனால் புதிதாக இந்திய ரஷ்ய ஒப்பந்தங்கள் எழுதுவது மிக சிக்கலாகும் ஆனால் அந்த இடத்தை ஐரோப்பா அமெரிக்கா நிரப்பும்.இந்த போரில் முதலில் பாதிக்கபட்ட நாடு சந்தேகமில்லாமல் ரஷ்யா, இனி வெற்றியோ தோல்வியோ அது தலையெடுக்க இனி நீண்டநாளாகும்
அதை அடுத்து சிக்கலில் உள்ள நாடு பாகிஸ்தான், ஆம் சுத்தமாக நேரம் சரியில்லா நாடு அது, சும்மாவே அவர்கள் ஜாதகத்தின் 12 கட்டத்திலும் சனி ஆளுகின்றார், ரஷ்யாவோடு நாங்கள் கூட்டாளி என பாகிஸ்தானின் இம்ரான்கான் மாஸ்கோவில் சொல்லிகொண்டிருந்தபொழுதுதான் யுத்தம் வெடித்தது.
இனி பாகிஸ்தான் கட்டம் கட்டி குதறபடும், அதன் நிலை படுமோசமாகும் அது இந்தியாவுக்கு நல்லது, 100 வருடங்களுக்கு முன்பு அதாவது 1922ல் இதே உக்ரைனும் ரஷ்யாவும் சோவியத் யூனியனாக ஒற்றுமையாக உலகை மிரட்ட ஆரம்பித்தார்கள்.
பாகிஸ்தான் என்றொரு நாடே இல்லை, சீனா மன்னராட்சியில் பலவீனமாக கிடந்தது, இந்த 100 ஆண்டுகளில்தான் எவ்வளவு மாற்றம்? காலம் போடும் கோலம் அவ்வளவு சுவாரஸ்யமானது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.