24 special

கிடைத்த ரகசிய அறிக்கை..! அதிரடியாக அறிவாலயம் செய்த காரியம்...!

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

தமிழ்நாட்டின் குறிப்பாக இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக அரசு இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது! காரணம் இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் தோல்வியுற்றால் அடுத்து வரக்கூடிய 2026 தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் மேலும் இதே கூட்டணியை வைத்து 2026 தேர்தலை சந்தித்து விடலாம் என அறிவாளி தரப்புகள் கணக்கு போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காரணத்தினால் இப்பொழுது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று கண்டிப்பாக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காக திமுக இப்போது இருந்து திட்டமிட்டு வருகிறது எனவும் சில அறிவாலய தகவல்கள் கசிந்துள்ளன.


இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் இணைப்பு என திமுக வேலைகளை ஆரம்பித்து விட்டது. இப்படி தீவிர தேர்தல் வேளையில் திமுக அரசு இயந்திரம் பம்பரமாக செயல்படாட்டிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை 11 பேரை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அதன்படி கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார், மேலும் ஈரோடு மாநகராட்சி, திண்டிவனம் ஆணையர், சென்னை மாநகராட்சியில் வடக்கு மண்டல துணை ஆணையர், கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரதாப் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குனராக, ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த தர்பகராஜ் உயர் கல்வித் துறையின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் மதுரை, சென்னை மாநகராட்சியில் மண்டல ஆணையர், துணை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், பொள்ளாச்சி சார் ஆட்சியர், ஓசூர் சார் ஆட்சியர் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த மாற்றம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது மட்டுமல்லாமல் கடந்த 11ஆம் தேதி அதாவது ஒரு வாரத்திற்கு முன்பு கூட தமிழக அரசு பல ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணி என்ன? ஏன் இந்த திடீர் மாற்றம் என விசாரிக்கும் பொழுது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. அதாவது தற்பொழுது களத்தில் அரசு திட்டங்கள் எப்படி சென்று சேருகின்றன, எந்த மாதிரியான சூழல் நிலவுகிறது என விசாரிக்கும் பொழுது திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியாக உள்ளதாகவும் அதற்க்கு காரணமாக  மகளிர் உதவித்தொகை, பத்திரப்பதிவு கட்டணம் மாற்றங்கள், மேலும் உட்கட்டமைப்பு சாலை மற்றும் குடிநீர் வசதிகளில் ஏற்பட்ட தோய்வு இவை எல்லாம் காரணம் என அரசுக்கு உளவுத்துறை அறிக்கை சென்றுள்ளது. 

இதே நிலைமை நீடித்தால் கண்டிப்பாக வரும் தேர்தலில் பின்னடைவு என ரிப்போர்ட் பறந்த காரணத்தினால் தான் இந்த அதிகாரிகள் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது, இது மட்டுமல்லாமல் அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம் கூட இருக்கலாம் கண்டிப்பாக வரும் டிசம்பருக்குள் அமைச்சரவையை மீண்டும் மாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார் சில தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்த அரசியல் விமர்சகர்களிடம் கேள்வியை முன்வைத்த பொழுது திமுகவிற்கு தற்பொழுது தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது, அதன் காரணமாகத்தான் இப்படி அரசு எந்திரம் மாற்றப்படுகிறது என விமர்சனங்களை முன் வைத்தனர்.