புதுதில்லி : பெண் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது வழக்கு பதிந்துள்ளனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் சோனியாவின் செயலாளர் 71 வயதான பிபி மாதவன் எனவும் இதுதொடர்பாக அவரை இன்னும் கைதுசெய்யவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துவாரகா டிஜிபி ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் " ஜூன் 25 அன்று பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் 71 வயதான பிரபல அரசியல்வாதியின் தனிப்பட்ட செயலாளர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு (பாலியல் பலாத்காரம்) 376, மற்றும் குற்றவியல் மிரட்டல் (506) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
தனியார் செய்திநிறுவனத்திடம் பேசிய பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டவரான மாதவன் கூறுகையில் "காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறுகளை பரப்பவே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. இது துளியும் ஆதாரமில்லாத குற்றசாட்டு. இதில் உண்மை எதுவும் இல்லை. இது ஒரு திட்டமிடப்பட்ட முழுமையான சதி" என மாதவன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர் 2020ம் ஆண்டு தனது கணவர் மரணமடைந்ததும் மாதவனை சந்தித்துள்ளார். ஏனெனில் அவர் கட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். வேலை தேடி அந்த அலுவலகத்திற்கு செல்லும்போது மாதவனின் செல்போன் எண்ணை வாங்கியதுடன் அவரிடமும் பேசியுள்ளார்.
அவரிடம் வேலை கேட்டபோது அவர் வாங்கித்தருவதாக வாக்களித்து 21 ஜனவரி 2022 ஒரு நேர்காணலுக்கு அழைத்துள்ளார். அங்கு பொறுமையாக பலகேள்விகளை கேட்டபிறகு திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். ஒருநாள் அவர் தனது காரில் வந்துள்ளார். காருக்குள் வைத்து அந்த பெண்ணை கற்பழிக்க முயல்கையில் அந்த பெண் மாதவனை தள்ளிவிட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.
மேலும் சிலநாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு சகஜமாக பேசியுள்ளார். மீண்டும் பிப்ரவரி மாதம் அந்த பெண்ணை அழைத்துள்ளார். பின்னர் அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அடிக்கடி மிரட்டி கற்பழித்தது மட்டுமல்லாமல் இன்னொருவருடன் உறவுகொள்ள சொல்லி வற்புறுத்தியுள்ளார். 70 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட கட்சி எனவும் நாட்டை கடத்திவிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருப்பதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.