24 special

உயிருக்கு அச்சுறுத்தல்..! உச்சநீதிமன்றம் நச் கேள்வி..!

Sivasena
Sivasena

மஹாரஷ்டிரா : பிஜேபியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த சிவசேனா தேர்தல் வெற்றிக்குப்பிறகு காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறுசிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது. ஆனால் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியே உத்தவ் தாக்கரேக்கும் கொடுக்கப்பட்டது.


ஆனால் அனைத்துக்கும் விட்டுக்கொடுத்து சென்ற உத்தவ்தாக்கரே சிவசேனாவின் மாண்பை குலைப்பதாகவும் பால்தாக்கரேவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கட்சிக்குள்ளேயே விமர்சனம் எழுந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 5 அமைச்சர்கள் உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா துணை சபாநாயகர் மீது ஏக்நாத் ஷிண்டே கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். மேலும் ஷிண்டே உட்பட அதிருப்தியாளர்களின் வீடுகள் அலுவலகங்கள் சிவசேனா தொண்டர்களால் சூறையாடப்பட்டது. அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவரின் மகன் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இதைத்தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் பாதுகாப்பாக இருக்கும் அதிருப்தியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. ஏக்நாத் ஷிண்டே சஞ்சாய் ராவத்தின் இறந்த மனசாட்சி என்று குறிப்பிட்டதை சிவசேனா குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியது.

இந்த மனுவின் மீதான விசாரணையில் ஏக்நாத்ஷிண்டே தரப்பு வழக்கறிஞரான என்.கே கவுலிடம் மும்பை நீதிமன்றத்தை ஏன் முதலில் அணுகவில்லை என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த கவுல் அதிருப்தியாளர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதுடன் அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் ஏக்நாத் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரை பற்றி கூறிய நீதிபதி சூர்யகாந்த் " தன்னை நீக்ககோரிய தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரிப்பார் என்றால் துணை சபாநாயகர் சொந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறாரா" என கண்டித்த நீதிபதி இது தொடர்பாக மறுநாளும் விசாரணை நடைபெறும் என கூறி உத்தரவிட்டுள்ளார்.