திமுகவின் முக்கிய அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை புகார் சுமத்தி கைது செய்தும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு சென்றது. மறுபுறம் செந்தில் பாலாஜியின் மனைவி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது கைது பற்றி எந்த முன்னறிவிப்பும் அமலாக்க துறை கொடுக்கவில்லை என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நிஷா பானு மற்றும் பரதசக்கரவர்த்தி நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் தரப்பில் கபில் சிபலும், என் ஆர் இளங்கோவும் ஆஜரானார்கள் அமலாக்கத்துறை தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் தூஷார் மேத்தா ஆஜரானார்.
இந்த விசாரணை இறுதியில் 2 நீதிபதிகளும் இரண்டு வேறு விதமான தீர்ப்புகளை வழங்கினர், இரு நீதிபதிகளின் தீர்ப்பிலும் முரண்பாடுகள் இருப்பதால் மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனை நியமித்து அவர் அளிக்கும் தீர்ப்பு மூலம் இந்த வழக்கு முடிவு பெறும் என்று கூறப்பட்டது. பிறகு கடந்த இரண்டு நாட்களாக மூன்றாம் தரப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்ட நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பொழுதும் நீதிபதி பல கேள்விகளை அமலாக்கத்துறைக்கும் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் கேட்டுள்ளார், ஒரு அரசியல்வாதியின் வழக்கு இவ்வளவு நாட்கள் மக்களால் உற்று நோக்கப்படுகிறது என்றால் அது செந்தில் பாலாஜி வழக்கு என்று கூறும் அளவிற்கு நீதிமன்றத்தில் வாதங்கள் விறுவிறுப்பாக நகர்ந்தது.
பிறகு மூன்றாவது விசாரணை மேற்கொள்ளப்பட்ட முடிவில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து முன்பு நீதிபதி பரதசக்கரவர்த்தி அளித்த தீர்ப்போடு ஒத்துப் போகின்ற தீர்ப்பை நீதிபதி கார்த்திகேயன் கூறினார். அதாவது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அமலாக்க துறையின் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும், சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் அதனால் செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மேலும் ஆடகொணர்வு மனு விசாரணைக்கு இது உகந்தது அல்ல என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
அதோடு செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே அமலாக்கத் துறையின் விசாரணை காலத்தை கணக்கிட வேண்டும் இதனால் ஜூன் 14ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆகும் வரையிலான காலகட்டத்தை அமலாக்க துறையின் விசாரணை காலம் என்ற கணக்கில் சேர்க்கக்கூடாது என்று அமலாக்க துறைக்கு சாதகமான தீர்ப்பை நீதிபதி கார்த்திகேயன் வழங்கி தீர்ப்பளித்தது செந்தில் பாலாஜி தரப்பினரை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வைத்து செந்தில் பாலாஜியிடம் இனி விசாரணை மேற்கொண்டால் சட்ட ரீதியான பிரச்சினை மற்றும் பல இடர்பாடுகள் வரும் என தெரிந்து வெளிமாநிலங்களில் அதிலும் குறிப்பாக திகாருக்கு செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதற்கு காரணம் தமிழகத்தில் அவர் சம்மந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்த சென்றால் அதிகாரிகள் தாக்கப்படுவது, விசாரிக்க சென்றால் நெஞ்சு வலி எனக்கூறி அடம்பிடிப்பது என விசாரணை, ரெய்டுக்கெல்லாம் செந்தில்பாலாஜி தரப்பு ஒத்துழைக்க மறுப்பதால் வெளிமாநிலத்தில் வைத்து விசாரித்தால் எந்த தடையும் இல்லாமல் விசாரிக்க முடியும் என்ற காரணத்தினால் அமலாக்கத்துறை இந்த முடிவை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து வரும் வாரங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.