பூ கடை பாட்டி சொன்ன ஒற்றை வார்த்தை போச்சே போச்சே தலையில் அடித்துகொண்டு புலம்பும் திமுக..!அண்ணாமலை குறித்தும் பாஜக குறித்தும் பூ கடை நடத்திவரும் பாட்டி குறிப்பிட்ட தகவல் தற்போது சமூக வலைத்தளங்களை புரட்டி போட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். நேற்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் நான் டி ஆர் பாலு மீது வைத்த ஊழல் குற்றசாட்டு குறித்து அழகிரியே கூறி இருக்கிறார் என குறிப்பிட்டும்.
மேலும் ஊழலுக்கு எதிராக அஞ்ச மாட்டோம் நாங்கள் தொடர்ந்து ஊழலை எதிர்த்து களத்தில் நிற்போம் எனவும் பேசி இருந்தார் இது குறித்து மக்கள் கருத்தை அறிய TNNEWS24 குழு களம் இறங்கியது.அப்போது பூ கடை வைத்து இருக்கும் பாட்டி அண்ணாமலை சொன்னது சரி தான் ஏன் அழகிரி சொன்னால் அவரை குறை சொல்ல மாட்டார்கள் ஆனால் அண்ணாமலை ஊழல் குற்ற சாட்டு சொன்னால் வழக்கு தொடுபார்க்களா?
தம்பி நானே திமுகவிற்கு ஒட்டு போட்டவன் தான் இப்போ இந்த ஆட்சி சரியில்லை அந்த தம்பி அண்ணாமலை நல்லா பேசுது, நான் தினமும் பேப்பர் படிப்பேன் அந்த தம்பி நல்லா வரணும் என பேசியவர் நிருபர் உங்களுக்கு அண்ணாமலை பிடிக்குமா என கேட்க நான் அண்ணாமலை ரசிகை என அவருக்கே உரிய பாமர சிரிப்பில் மெல்ல சிரித்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் அண்ணாமலை இந்த பாட்டியை அவரது நடை பயணத்தின் போது சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
பாமர மக்கள் கூட தற்போது தமிழகத்தில் பாஜகவை விரும்ப தொடங்கி இருக்கிறார்களே அடுத்து அண்ணாமலை பாதயாத்திரை வேற இருக்கிறது அவையும் என்ன மாற்றத்தை உண்டாக்க போகிறதோ என்ற அச்சத்தில் தலையில் அடித்து கொண்டு புலம்பி வருகிறதாம் ஆளும் கட்சியான திமுக.