24 special

கும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே...!மீண்டும் அழுக ஆரமித்த வி.எஸ்.பி...!

Senthil balaji
Senthil balaji

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம்! காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜி ரீயாக்ஷ்ன் பற்றிய பரபர தகவல்!க்கடந்ததஒரு 1 மாத காலமாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக  பேசப்படுவது செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் அதற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் மேல் முறையீட்டு மனு ஆகியவை நீதிபதி பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு  கொண்டுவரப்பட்டடது. .இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட கோணத்தில்  தீர்ப்பை வெளியிட்டதால்  இந்த விசாரணை உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. 


இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியாக   சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் வழக்கு திமுக  கட்சியினருக்கு  பெரும் சவாலாக உள்ளது எனவும் திமுக தரப்பில் செந்தில் பாலாஜியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் செந்திபாலாஜி வழக்கில் தீர்ப்பு வந்தது.

இறுதியாக மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பில் நீதிபதி சிவி கார்த்திகேயன் கூறியது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சிவி கார்த்திகேயன் அளித்த தீர்ப்பில் , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவுக்கு  ஆதரவாக நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தியின்  தீர்ப்பான செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு செல்ல தக்கதல்ல என்பதை ஏற்றுக்கொண்டும்  அவரை நீதிமன்ற காவலில் எடுக்க அமலாக்க துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது எனவே பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானதுதான் என்ற அதிரடியான தீர்ப்பை வெளியிட்டார்.

நீதிபதி சி.வி கார்த்திகேயன் தீர்ப்பில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் அவரை கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு சரிதான் என்றும் அமலாக்க துறையினரின் நடவடிக்கைகளில் எந்த சட்ட விதிமுறைகளும் இல்லை என்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார். மேலும் செந்தில்பாலாஜி சிகிச்சை முடிந்த பிறகு அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனைத்து அதிகாரமும் உள்ளது என்ற தெளிவான கருத்தை நீதிபதி சி.வி கார்த்திகேயன் தெரிவித்தார். 

மேலும் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மீது எந்த குற்றமில்லை என்றால் அவர் நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும் என்ற தனது அதிரடியான தீர்ப்பை வெளியிட்டார். மீண்டும் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரின் விசாரணைக்கும் காவல் நடவடிக்கைக்கும்   ஆளாக்கப்படுவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுமா என்று செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற தீர்பபிற்காக ஒவ்வொரு நொடியும் காத்துக்கொண்டிருந்த செந்தில் பாலாஜி தரப்பிற்கு பேரதிர்ச்சியாக அமைந்ததாகவும் இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை என தெரிந்து மருத்துவமனையில் தனக்கு நெருங்கியவர்களிடம் மிகவும் வருத்தப்பட்டு ஆளும் நிலைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன! மேலும் தனது நெருக்கமானவர்களிடம் செந்தில்பாலாஜி, இனிமேல் எதுவும் செய்ய முடியாதா ஏதாவது செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று புலம்பியதாக வேறு தெரிகிறது! இது மட்டுமல்லால் அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை விரைந்து என்ன நடவடிக்கை எடுக்குமோ என்ற பயத்திலும் செந்தில்பாலாஜி விடாமல் புலம்பி வருவதாகவும், அவரது அருகில் இருந்தவர்கள் அவரை தேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்தப்பக்கம் அமலாக்கத்துறை வேறு இனி ஒரு நாளும் தாமதிக்கக்கூடாது என அடுத்தகட்ட வேளைகளில் இறங்கிவிட்டது என  செய்திகள் வெளியாகியுள்ளன.