24 special

திமுக கூட்டணியில் பிளவா..? மதிமுகவை ஓரம் கட்டுகிறதா திமுக.. வெளியாகும் முக்கிய தகவல்..!

Vaiko, Durai vaiko
Vaiko, Durai vaiko

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக உடன் கூட்டணியியல் இருக்கும் மதிமுக கட்சிக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்பட்டது. சிறப்பாக நடந்து முடிந்த இந்த தேர்தலில் மதிமுக சார்பாக அக்கட்சியின் செயலர் துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளன.


காலம் காலமாக திமுகவுடன் பயணிக்கும் வைகோ நாடளுமன்ற தேர்தலில் இரு தொகுதியை குறிவைத்து பயணிப்பார். இந்த நிலையில், இந்த தேர்தலில் திமுக சில கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்பட்டது. அதாவது, ஒரு தொகுதியை ஒதுக்குவதாகவும் அதும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் சில செய்திகள் உலா வந்தது. ஆனால், மதிமுகவோ நின்றால் சொந்த சின்னத்தில் தான் என ஒற்றை காலில் நின்று வந்ததாம். அதற்கு ஏற்றார் போல் தேர்தல் ஆணையமும் சுயேட்ச்சியாக ஒரு சின்னத்தை ஒதுக்கியது.

இந்த சூழ்நிலையில், திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று அமைச்சர் கே.என். நேரு அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே கண்ணீர் வடித்தார் துரை வைகோ. அதிலிருந்து திருச்சியில் உள்ள திமுக நிர்வாகிகள் யாரும் துரை வைகோவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று சில செய்திகள் வெளியானது. அதேபோல், வைகோவுக்கும், துரை வைகோவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும் இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்யவில்லை என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேகொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் மதிமுக முதன்மை செயலர் துரைவைகோ போன் வாயிலாக பேசியதாக வெளியான தகவலை அடுத்து, திமுகவில் பிளவு ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசியல் வட்டாரத்தில் தெரிவிப்பது இனி மதிமுகவின் எதிர்காலம் துரை வைகோதான் என்று ஆகிவிட்ட நிலையில், அவரின் வளர்ச்சியை பிடிக்காதவர்களும், அவரின் செயல்பாடுகளால் கட்சி புது தெம்பை பெற்றுவிடுமோ என்று அஞ்சுபவர்களும் இதுபோன்ற வேலைகளை பார்ப்பதாக மதிமுக தலைமை நினைத்து வருகிறதாம்.

அண்ணாமலைக்கு ஆதரவு கொடுப்பவர்கள் தெரிவிப்பது, தி.மு.க., கூட்டணிக்கு எதிரான அரசியல்வாதியாக அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், நட்பின் அடிப்படையில் தன்னுடன் பேச வரும் யாரையும் மறுக்க மாட்டார். அந்த வகையில், அண்ணாமலை, துரை வைகோவிடம் பேசியிருக்கக்கூடும் என கூறுகின்றனர். ஒருபக்கம் அரசியல் வட்டாரத்தில் அரசியலில் இது சாதாரணம் என கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.