
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதனால் இணையத்திலும், பொதுமக்கள் வட்டாரத்திலும் பிரகாஷ் ராஜ் மீது விமர்சனங்கள் முன் வைக்க தொடங்கியுள்ளனர்.
பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். சமீபமாக பிரகாஷ் ராஜின் பேச்சுக்கள் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமாக இருந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு மீது விமர்சனத்தை முன் வைத்து பேசி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஸ் ராஜ் இருப்பினும் அவர் தமிழ் சினிமா மூலமே மக்களிடம் ஒரு நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அரசியலை பேசி வரும் பிரகாஷ் ராஜ் செயல் மக்ளிடம் முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த நபர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், உள்ளிட்ட விருதுகளை கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தாரமையா உள்ளிட்டோருக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தாண்டிற்கான விருதுகளை நேற்று விசிக அறிவித்தது.
அதில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்குவதாக விசிக அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் விமர்சகர்கள் கூறுவது, பிரகாஷ் ராஜ், திமுக மற்றும் விசிக எல்லாம் ஒரே கம்பெனி தான். ஒரு காலத்தில் திமுகவுக்கு எதிராக பேசியவர் தான் திருமாவாவன் அவர் தான் கலைஞரை பார்த்து வாழும் அம்பேதர் என்றெல்லாம் புகழ்ந்தவர். பிரகாஷ் ராஜ் ஆந்திராவில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் நின்றார். அப்போது அந்த மக்கள் அவருக்கு பாடம் புகட்டி வாபஸ் பெற செய்தார்கள். ஆனால், தமிழகத்தில் தான் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் தலையில் தூக்கி வைக்கின்றனர். பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் விருது என்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகவே நான் பார்க்கிறேன் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.