24 special

ஸ்டாலின் போட்ட கனவு சுக்கு நூறானது....! அடித்து காட்டிய மோடி...!

mk stalin, modi
mk stalin, modi

I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜகவிற்கு எதிராக வியூகம் வகுக்க மும்பையில் கூடியுள்ள நிலையில் அவர்களின் கனவில் மண்ணள்ளி போடும் விதமாக மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி இருப்பது ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் கனவில் மண்ணள்ளி போட்டு இருக்கிறது.வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென நேற்று அறிவித்தது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறும். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நடைபெறும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.எதிர்க்கட்சிகள் மும்பையில் நடைபெறும் கூட்டத்தை மையமாக வைத்து இந்திய அரசியலே ஆட்டம் காணும் என எதிர் பார்த்து இருந்தன, மேலும் சில நாட்கள் முன்பு மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மும்பையில் சிறப்பான சம்பவம் இருக்கிறது என சூசகமாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஒரே அறிவிப்பு மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உருவாகி இருப்பதால் ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சொன்னது போல் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழக சட்டமன்ற தேர்தளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க போகிறதோ? மீதம் உள்ள ஆட்சி நிலை என்ன ஆவது என இப்போதே பதற்றத்தில் இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.மொத்தத்தில் மோடிக்கு ஆப்பு வைக்க மும்பையில் எதிர்கட்சிகள் கூடியுள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதன் மூலம் ஆப்பு வைத்து இருக்கிறார் பிரதமர் மோடி, மோடியே அல்ல அவரது டாடியே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என சொன்ன திமுகவினர் தற்போது சிறப்பு கூட்ட தொடரில் என்ன நடக்குமோ என கடும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாட்டை காப்பாற்ற முடியாது என முதல்வர் மேடை தோறும் பேசிக்கொண்டு இருந்த நிலையில் இன்று ஒரு சிறிய அறிவிப்பின் மூலம் திமுகவின் மீதம் உள்ள ஆட்சியை காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டு இருக்கிறார்.