24 special

மீண்டும் புலம்பலை தொடங்கிய ஸ்டாலின் ...!

mk stalin, ev velu
mk stalin, ev velu

பலரும் கூறிய படியே நேற்று திமுகவின் முக்கிய கூட்டங்களில் ஒன்றான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டதும் குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் மத்தியில் யாரும் ஓசியில் வர கூடாது என முதல்வர் ஸ்டாலின் புலம்பியதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் இதற்கு பாஜக மீதான பயம் தான் காரணம் என்ற தகவல் தற்போது மேலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. நேற்று திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள திமுக எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அமைச்சர் எ வ வேலுவை தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,  நான் பதினைந்து நாட்களாக உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன், டாக்டர் முழுமையாக ஓய்வு எடுக்க சொல்கிறார்கள், இருந்தாலும் இந்த கூட்டம் முக்கியமானது என்பதால் கலந்துகொண்டு பேசுகிறேன்.
அறிவாலயத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கூட்டத்தை நடத்த வழக்கமாக ஜெகத்ரட்சகன் அவரது ஹோட்டலில் இடம் கொடுத்துள்ளார், உங்களுக்கு அனைவருக்கும் பலவிதமான உணவுகள் ஏற்பாடுகள் செய்கிறார் என நினைக்கிறேன்.இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகதான், இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு திமுகவில்தான் இளைஞர் அணி பலமாக உள்ளது, அதனால் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்.


மாநாட்டில் ஐந்து லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என எதிர் பார்க்கிறேன்.இளைஞர் அணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே. என். நேருவை இந்த கூட்டத்தில் அறிவிக்கிறேன், மாநாடு சம்பந்தமாக அவருக்கு முழு அதிகாரம் கொடுக்கிறேன் அவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்.மேலும் மாநாட்டுக்கு பேனர் தட்டிகள் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும். காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும். மாறாக கொடிகளை கட்டுங்கள், ஏற்றுங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் எடுத்து வந்தால் பணம் செலுத்தி அதற்கான பில்லை வாங்கி தலைமைக்கு அனுப்ப வேண்டும், டீசல் போட்ட பில்லையும் வாங்கி கொடுக்க வேண்டும்.யாரும் ஓசியில் எடுத்து வரக்கூடாது, எந்தவிதமான கெட்ட பெயரையும் ஏற்படுத்தக் கூடாது, மீறி யாராவது தவறு செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.சேலம் இளைஞர் அணி மாநாடு என்பதே பாஜக நடத்தும் என் மண் என் மக்கள் மாநாடிற்கு போட்டியாக நடத்த படுகிறது என்பதை நேற்றைய கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பேச்சின் மூலம் தெளிவாக உணர தொடங்கி இருகின்றனர் திமுகவினர். 

சேலம் மாநாடு மூலம் பாஜக அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் செக் வைக்க முடியும் என ஸ்டாலின் கணக்கிட்ட நிலையில் மாநில உளவுதுறையில் இருந்து எச்சரிக்கை ஒன்று முதல்வருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது மதுரையில் அதிமுக நடத்திய பிரமாண்ட மாநாடு சிறப்பாக நடந்த நிலையிலும் மறு நாள் சாப்பாடு வீண் ஆனது தொடங்கி, மது பிரியர்கள் போராட்டம், டிராபிக் என பெருத்த எதிர்ப்பை சந்தித்தது, அதே போல் சேலத்தில் ஏதாவது நடந்தால் பாஜக அதை வைத்தே மக்களிடம் உண்மைகளை எடுத்து செல்லும் அதோடு நில்லாமல் அரசு வாகனத்திற்கு பணம் செலுத்தவில்லை என்ற தகவல் கிடைத்தால் மாநாடு நடத்திய நோக்கமே மக்கள் மத்தியில் வேறு மாதிரி செல்ல வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். இதயடுத்து தான் யாரும் ஓசியில் பயணம் செய்ய கூடாது எனவும் கண்ணியமாக இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் மத்தியில் புலம்பி தள்ளி இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.