24 special

தஞ்சை முழுவதும் வைரலாகும் வீடியோ பார்த்தீர்களா வடையை கொடுத்து மொத்தமாக முடித்து விட்டார். ..!

annamalai,mkstalin
annamalai,mkstalin

வழக்கமாக அண்ணாமலை மேற்கொள்ளும் யாத்திரையில் இருந்து நேற்று யாத்திரை நேரம் மாற்றி அமைக்கப்பட்டது,  ஒட்டுமொத்த இந்தியாவின் விவசாய அஸ்திவாரமாக இருக்கும் தஞ்சை பகுதியில் யாத்திரை நடைபெற்ற காரணத்தால் விவசாயிகளிடம் நேரத்தை செலவிட்டு அவர்களின் அனுபவத்தை தெரிந்து கொள்ள காலை 8 மணிக்கே யாத்திரை தொடங்கியது. 


நேற்று அண்ணாமலை விவசாயிகளுடன் இணைந்து வயலில் நாற்று நட்டது வைரலான நிலையில், தற்போது அண்ணாமலை விவசாயிகளுடன் நேரத்தை செலவிடும் வீடியோ பிரத்தியேகமாக TNNEWs24 பதிவு செய்தது,  காலையில் பசியில் இருந்த விவசாயிகளுடன் வடை டீ உள்ளிட்ட பலகாரங்களை கொடுத்து அதையே அண்ணாமலையும் சாப்பிட்டு கொண்டே பாட்டி இப்படி நாற்று நடும் போது உங்களது காலில் சேற்று புண் வரும்ல என்ன தேங்காய் எண்ணெய் போடுவீர்களா என கேட்க அதற்கு இல்லை தம்பி இப்போ ஆயில் மென்ட் போடுறோம் என சொன்னதோடு தம்பி நீங்க ஆட்சிக்கு வந்ததும் ஆம்பிளை பிள்ளை இல்லாத குடும்பத்திற்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும் என வேண்டுகிறேன் வைத்தனர். 

அப்படியே எளியவர்கள் மொழியில் எளியவர்களாக விவசாய தொழிலாளர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதும் இயல் பாக தனது சந்தேகங்களை கேட்டதும் தற்போது ஒட்டு மொத்த டெல்டா மக்களிடயே பரவி வருகிறது. 

அண்ணாமலை வந்து சென்ற போது விவசாயிகளிடம் கேள்வி எழுப்பியபோது இந்த தம்பியை பார்த்தால் எங்களுக்கு நம்பிக்கை வந்து இருக்கு,  பலகாரத்தை எல்லாருக்கும் கொடுங்கள் என தேடி தேடி சொன்னுச்சு,  நல்லா படிச்ச பையனா இருக்கு சிலருக்கு பதவியில் இருந்தாலும் எங்கள் கஷ்டம் புரியவில்லை ஆனால் இந்த அண்ணாமலை மோடி என்னென்ன எங்களுக்கு செய்தார் என சொன்னார்  யூரியா உரத்தை மோடி தான் மானியத்தில் கொடுக்கிறார் என்பதே இப்போது தெரிந்து கொண்டோம் என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

பதணியில் சர்க்கரை போடுவீர்களா என எமுதல்வர் ஸ்டாலின் கேட்ட நிலையில் தற்போது தஞ்சையில் அண்ணாமலை விவசாயிகள் மத்தியில் எளிய மொழியில் பேசியது இதுநாள் வரை பாஜக எதிர்பாப்பாளர்களாக இருந்தவர்களையும் மாற்றம் அடைய செய்து இருக்கிறது.

விவசாயிகளுக்கு அதை செய்வோம் இதை செய்வோம் என வாயில் வடை சுடும் திராவிட கட்சிகள் மத்தியில் விவசாயிகளின் எளிய உணர்வை அண்ணாமலை அறிந்து கொண்ட விதம் தற்போது திமுக உள்ளிட்ட திராவிட கட்சியினர் மத்தியில் புகைசலை கிளப்பி இருக்கிறது.