திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது சமூக தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் குற்ற சம்பவங்களையும் கூடவே அழைத்து வந்து விட்டதாக பல அரசியில் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினார். ஏன்னெனில் அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவதை செய்து வருகிறார்கள். அதற்கு அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசுதல், சாதி பாகுபாடு போன்று பல இன்னல்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க ஏழை எளிய மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்து கொடுக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வயிறு நிறைந்தால் போதும் என்று ஊழலில் ஈடுபடுவருவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்நாட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ''திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்''. என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.