தமிழகத்தில் பொங்கல் பரிசு விநியோகம் திமுக அரசிற்கு நற்பெயரை ஈட்டி கொடுக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போது அது தலைகீழாக மாறி ஆளும் அரசிற்கு எதிராக கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை என பலரும் குற்றம் சுமத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.
அத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வட மாநிலங்களில் கொள்முதல் செய்யபட்டது ஏன் எனவும் இந்தியில் பெயர்கள் இருந்தது ஏன் என்றும் அரசை நோக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார், இது ஒருபுறம் என்றால் பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருப்பதாக வீடியோ வெளியிட்ட முதியவரை கைது செய்தது தமிழக காவல்துறை. இதனை கண்டித்து முதியவரின் மகன் தீ குளித்து தற்கொலை செய்ய விஷயம் பூதாகரமாக வெடித்தது.
இது அரசிற்கு கடும் பின்னடைவை கொடுத்த நிலையில் அமைச்சர்களை அழைத்து நிலவரங்களை கேட்டறிந்துள்ளார் ஸ்டாலின், இதன் அடிப்படையில் மூன்று அமைச்சர்களின் துறைகளில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது ஒருபுறம் என்றால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்த செயல் முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது உள்ளம் உருகுதையா என்ற பாடலை வெல்லம் உருகுதையா என டப்பிங் செய்து பாடலை பாடி வெளியிட்டுள்ளார் ஜெயக்குமார் இந்த பாடல் இணையத்தில் வைரலாக பலருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி நடந்தது தெரியவந்துள்ளது, மேலும் இந்த பாடலை பார்த்த முதல்வர் என்ன நடக்கிறது ? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில் இப்படியா நடக்கும் என வேதனை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் பாடலை பார்த்து சிரிக்கவும் முடியாமல் அதே நேரத்தில் அமைதியாகவும் கடந்து செல்ல முடியாமல் திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் அந்த பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.