24 special

காசிக்கு சென்று ஆன்மீகவாதியாக மாறிய மாணவர்கள்! கதி கலங்கும் திமுக! மோடி மேஜிக்!

Modi
Modi

காசி தமிழ் சங்கமம் என்னென்ன மாற்றத்தை உண்டாக்க போகிறது என எதிர் கட்சிகளில் ஒன்றான கட்சிகளும், முதல்வரும் நினைத்தார்களோ அது அப்படியே நடந்து இருக்கிறது.


மாணவர்களை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதன் மூலம் பாஜக அரசியல் செய்கிறது என கம்யூனிஸ்ட் கட்சிகள் குறை கூறின, முதல்வர் ஸ்டாலின் காசி தமிழ் சங்கமம் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை மாறாக மறைமுகமாக கருத்து தெரிவித்தார் அதில்,

தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்!

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட என காசி தமிழ் சங்கமம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.

இந்த சூழலில் மாணவர்கள் காசி சென்று திரும்பினால் முழுமையாக இந்து மதம் குறித்து பேச தொடங்குவார்கள், ஏன் பிரதமர் மோடியை பாராட்டுவார்கள் குறிப்பாக உத்திர பிரதேசம் குறித்த உண்மையை அறிந்து கொள்வார்கள் என்றெல்லாம் புலம்பு வந்தார்கள் செக்யூலர்கள் அவர்கள் கூறியது அப்படியே நடந்து இருக்கிறது.

காசியில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் அனைவரும் இறங்கியதில் இருந்தே காசி பயணத்தை கொண்டாட தொடங்கினர், குறிப்பாக பல இளம் மாணவர்கள் நெற்றியில் திருநீறு உடன் வந்து இருக்கினர், வந்தவர்கள் சொன்ன வார்த்தை இந்தியாவில் வேறுபாடு இல்லை இந்தியா ஒரே நாடு

எங்களை VIP போல பார்த்து கொண்டார்கள்,  ராமர் கோவில் பார்த்தோம் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களை கனிவுடன் பார்த்தார்கள் மோடி எப்படி பட்டவர் என்றெல்லாம் பாராட்டு பாத்திரம் வாசித்தார்கள் மாணவர்கள்,

இந்த நிகழ்வுகளை TNNEWS24 நேரடியாக பதிவு செய்தது, இந்த வீடியோவை பார்த்த பலர் அடடா இப்படி ஒரே வாரத்தில் மாணவர்கள் பலர் திடீர் ஆன்மீக வாதியாக மாறிவிட்டார்களே, இன்னும் இது போன்ற இரண்டு பயணம் சென்றால் முழுமையாக மாறிவிடுவார்கள் போல என எதிர் தரப்பு புலம்பி வருகின்றனர்.