24 special

மதுரையில் இப்படி ஒரு கேப்டன் ரசிகரா!!

vijayakanth
vijayakanth

2023 டிசம்பர் மாத இறுதியில் தமிழ் திரை உலகின் முக்கிய நடிகராக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிர் இழந்தார். இவரது இழப்பு தமிழக முழுவதையும் சோகத்தில் மூழ்கடித்தது. தமிழகம் தாண்டி இந்திய அளவிலும் விஜயகாந்த் இறப்பு அரசியலின் மிக முக்கிய பிரமுகர்களுக்கும் நாட்டின் பிரதமருக்கும் பெரும் வருத்தத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னை தீவுதடலில் விஜயகாந்தின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது ஏனென்றால் அந்த அளவிற்கு மக்களின் கூட்டமானது நேரத்திற்கு நேரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. திரை உலகின் தரப்பிலும் விஜயகாந்துடன் நடித்த நடிகர்கள் விஜயகாந்தை பார்த்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர் இருப்பினும் தற்பொழுது இளம் மற்றும் முக்கிய நடிகர்களான சூர்யா, தனுஷ், கார்த்தி, விக்ரம், விஷால், ஆரியா போன்ற நடிகர்கள் விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இது குறித்து சமூகவலையதளங்கள் முழுவதும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. 


இப்படி நடிகர் சங்கம் விஜயகாந்தை கைவிட்ட போதிலும் விஜயகாந்தின் ரசிகர்கள் தீவுதடலில் குவிந்து கேப்டனின் இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர் மல்க அழுத வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி மத்திய அரசு தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சென்னைக்கு அனுப்பி வைத்து விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வைத்ததும் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றது. பிரதமரே தன் சார்பாக மத்திய நிதியமைச்சர் அனுப்பி வைத்துள்ளார் ஆனால் நடிகர் சங்கத்தின் தலைவரோ வெளிநாட்டிற்கு சென்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்! விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் பொழுது நடிகர் திலகம் சிவாஜியின் இறப்பை எப்படி தலைமையேற்று அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து இறுதி சடங்கை நடத்தி முடித்தார் ஆனால் இன்றிருக்கும் நடிகர் சங்கம் என்ன செய்கிறது இதுதான் விஜயகாந்த்திற்கும் தற்போதைய நடிகர் சங்க தலைவருக்கும் உள்ள வேறுபாடு என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், மதுரையில் ஒரு தியேட்டரில் விஜயகாந்தின் முக்கிய படங்கள் இலவசமாக திரையிட்டு ஒளிபரப்பபட்டுள்ளது! அதாவது மதுரை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த காசி பிலிம்ஸ் விஜயகாந்தின் பேரரசு படத்தை கட்டணமில்லாமல் பொதுமக்களுக்கு திரையிட்டுள்ளது. மேலும் மதுரை நாகமலை புதுக்கோட்டை சினிமா விநியோகஸ்தர் காசி பிலிம்ஸ் விஜயகாந்த் படத்தை அதிகமாக வெளியிட்டவர் ஆனால் தற்பொழுது அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது இருப்பினும் அவரது மகன் இந்த தியேட்டரை நடத்தி வருவதால் விஜயகாந்தின் நினைவாக நேற்றிலிருந்து விஜயகாந்தின் படங்களை பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாமல் திரையிட்டு வருகிறார். 

இது போன்ற நிகழ்வுகள் எம்ஜிஆர் இறந்த போது கூட நடந்ததா என்பது ஞாபகம் இல்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் இறந்த பொழுது எவ்வளவு கூட்டம் சென்னையில் கூடியதோ அதேபோன்ற கூட்டம் விஜயகாந்தின் இறப்பிற்கும் கூடியதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஒரு மனிதனின் நினைவாக பொதுமக்களுக்கு இலவசமாக அவரது படத்தை மதுரையைச் சேர்ந்த காசி பிலிம்ஸ் திரையிட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் இப்படி ஒரு ரசிகரா என்றும் இணையத்தில் கமெண்டுகள் பறக்கிறது. கேப்டன் மறந்தாலும் அவரால் வாழ்ந்தவர்கள் இன்னும் அவரை சாமியாகத்தான் கொண்டாடுகிறார்கள் எனவும் வேறு பலரின் மூலம் நிரூபணமாகிறது.