
தமிழ் சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டும் மக்கள் மனதில் இருந்து நீங்க மாட்டார்கள் அப்படி இருந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். சினிமாவை தொடர்ந்து அரசியலில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நல பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். விஜயகாந்தின் இறப்பு செய்தி கேட்டு திரை பிரபலங்களும் மக்களும் பெரும் துக்கத்தில் இருந்தனர்.
பெரும் அரசியல் தலைவர்கள் மறைவிற்கு பிறகு மக்கள் கூடம் அதிகரித்தது என்றால் அது விஜயகாந்துக்கு தனா, சுமார் 15 லட்சம் வரை மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். திரை பிரபலங்கள் பலரும் வரமுடியாமல் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இரங்கல் தெரிவித்தது சர்ச்சையாக மாறியது. சூர்யா, கார்த்தி, சிவகுமார், சரத்குமார், அருண் விஜய் போன்ற பிரபலங்கள் கடந்த சில நாட்களாக விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜய், சூர்யா போல் பல நடிகர்களின் வாழ்க்கையில் விஜயகாந்த் பெரிய பாதையை அமைத்து தந்துள்ளார். அதேபோல் வடிவேலு சினிமா பயணத்திற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய பங்காக இருந்துள்ளார். ஆனால் அவர் இறப்பிற்கு வடிவேலு ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது ரசிகர்களின் பெரிய வருத்தமாக உள்ளது.
வடிவேலுவுக்கு சினிமா வாழ்கை ஏற்படுத்தி கொடுத்தவர் விஜயகாந்த். அவர் இல்லை என்றால் இன்று வடிவேல் சினிமாவிற்கு வரமுடியாமல் ஒரு கூலி வேலை செய்து வருவார் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுகப்படுகின்றனர். ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டதை கொண்டு இது வரை விஜயகாந்திடம் பேசாமல் அவரது மறைவிற்கும் செல்லாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என விமர்சனம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், வடிவேலுவின் நண்பரும், விசிக நிர்வாகியுமான மாலின் ஒரு பேட்டியில், விஜயகாந்த் மறைவால் வடிவேலு அழுதது தனக்குத் தெரியும் என்றும் நேரில் சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதாலேயே அவர் செல்லவில்லையே தவிர மற்றபடி எந்தக் காரணமும் இல்லை எனவும் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு ஒரு நாள் முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளாமல் மிகவும் வருந்தினார் என்று பேசியுள்ளார். ஆனால், நெட்டிசன்கள் இதனை ஏற்று கொள்ளாமல் நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக கலந்துகொண்ட வடிவேல் அனைவராலும் விமர்சனம் அதிகரிக்க வைத்துள்ளது. இணையத்தில் நெட்டிசன்கள் திமுக தான் வடிவேலுக்கு முக்கியம் திமுகவுடன் சேர்ந்து கொண்டு தான் இப்படி கேப்டனை உட்டக்கார வைத்துவிட்டார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நெட்டிசன்கள் இறப்பிற்கு வர முடியல இதுக்கு மட்டும் வர தெரியுதா? என்றும் ஒருத்தர் வீட்டு நல்ல காரியத்திற்கு போகவில்லை என்றால் கூட கெட்ட காரியத்திற்கு கட்டாயம் போக வேண்டும் என்று ஊருக்குள் சொல்வாங்க, துணி மணி எடுத்து கொடுத்து வளர்த்து ஆளாக்கியவர் இறப்புக்கு போக உங்களுக்கு மனசு வரவில்லையா என அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுவருகின்றனர்.