24 special

ஓ எஸ் ஷர்மிளா முடிவு ஏற்படுத்திய யோசனை... ஆலோசனையில் கனிமொழி தரப்பினர்...

kanimozhi, os sharmila
kanimozhi, os sharmila

ஆந்திர மாநில முதல்வராக ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவர் ஒஎஸ் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார், அவரது சகோதரியான ஓஎஸ் ஷர்மிளா ரெட்டிக்கு அவருக்கும் சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து ஒ.எஸ்.ஷர்மிளா ரெட்டி அரசியல் வேலைகளை துவக்கினார். இது ஒரு கட்டத்தில் முற்றிப்போய் கட்சியில் இருந்து விலகுவதாக ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்லாமல் ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இது ஆந்திர அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது, முதல்வரின் தங்கையே இப்படி போய் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது வரலாற்றில் இதுவரை நடக்கவே இல்லை என கூறப்பட்டது.அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் ஓ.எஸ்.ஷர்மிளா ரெட்டிக்கு ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் வளர வேண்டும் என்பதற்காக ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறோம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.


அறிவித்தது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜை ராஜினாமா செய்த வைத்துவிட்டு அவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக மாற்றிவிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவராக ஒய் சர்மிளா ரெட்டியை காங்கிரஸ் நியமித்துள்ளது காங்கிரஸ் தலைமை.இதன் காரணமாக ஆந்திர அரசியலில் அண்ணன் ஒரு கட்சியிலும் தங்கை ஒரு கட்சியிடம் இருந்து கொண்டு எதிர் எதிர் துருவங்களில் அரசியல் செய்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்பொழுது தமிழகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆளும் திமுகவில் முதல்வராக மு க ஸ்டாலினும், எம் பி ஆக கனிமொழியும் இருந்து கொண்டு அப்போது சில பனிப்போர்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் கனிமொழிக்கு முறையான அழைப்பு கொடுக்காததும், அதனால் கனிமொழி கோபித்துக் கொண்டு கலந்து கொள்ளாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

ஆங்காங்கே சில பனிப்போர் முதல்வருக்கும், அவரது தங்கைக்கு வெடித்து வருவதை குறிப்பிட்டு தற்போது சர்மிளா ரெட்டியின் விவகாரத்தையும் குறிப்பிட்டு அரசியல் விமர்சகர்கள் பலவிதமான விவாதத்தை முன்வைக்கின்றனர். தமிழகத்திலும் இதைப் போன்ற நிலை வரலாம் ஒரு கட்டத்தில் கனிமொழி விலகிச் சென்று காங்கிரஸில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! அல்லது வேறு கட்சியில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! அப்படி கனிமொழி இணைந்தால் அவருக்கு தலைவர் பதவி தருவதற்கு காங்கிரஸ் கட்சியும் தயாராக இருக்கும். எப்படி ஷர்மிளாவுக்கு நடந்ததோ? அதுபோல் கனிமொழிக்கும் நடப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது கனிமொழி தரப்பு இதை இந்நேரம் யோசித்திருக்கும்! இனி ஷர்மிளா ரெட்டி விவகாரம் கனிமொழி தரப்பிற்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கும் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் வரும் காலங்களில் இது போன்ற எதுவும் பிரச்சனை வந்தால் சர்மிளா ரெட்டி போல் கனிமொழியும் அதிரடியாக முடிவு எடுக்க தயங்க மாட்டார். அவருக்கும் பதவிகள் காத்திருக்கிறது என கூறினார்கள். தமிழகத்தில் சர்மிளா ரெட்டி விவகாரம் போல் கனிமொழி விவகாரத்திலும் நடக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.