24 special

இப்படி ஒரு ஆபாசமா? அதுவும் காவி நிற உடையில்.. எங்க மாநிலத்தில் உங்க படம் உள்ளே வராது..!


பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான், இவரது நடிப்பில் இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’ இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி திரையுலகின் பிரபலமான யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக ‘பதான்’ உருவாகியுள்ளது. 


இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘பேஷராம் ரங்’ என்ற பாடல் கடந்த 12ம் தேதி இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. அன்று முதல் படத்தில் ஃபர்ஸ் சிங்கிளான இந்த பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

 ‘பேஷராம் ரங்’ பாடலில் பெரும்பாலான காட்சிகளில் திபீகா படுகோனே பிகினி உடையில் கெட்டம் ஆட்டம் போட்டுள்ளார். காண கண்கூசும் அளவிற்கு ஒட்டு அங்கமும் வெளியில் தெரியும் படியிலான பிகினி உடையும், அபத்தமான டான்ஸ் மூவ்களும் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஆரஞ்சு நிற பிகினி உடையில் திபீகா படுகோன் தோன்றியுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்து பெண்கள் என்றாலே இப்படித்தான் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடனமாடுவார்கள் என உலக அரங்கில் சித்தரிக்க முயற்சிப்பதாகவும், இதுவே முஸ்லீம் பெண்கள் பற்றிய கதாபாத்திரத்திங்களை நேர்த்தியாக வடிவமைப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா “பாடலின் காட்சிகள் மற்றும் தீபிகா படுகோனின் காவி நிற ஆடையை மாற்றாவிட்டால் படத்தை மத்தியப்பிரதேசத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ‘பேஷராம் ரங்’ பாடலைப் பார்த்துவிட்டு பிரபல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அடித்த நச் கமெண்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சிகுருபதி பாபு ராவ், பாடலில் இடம்பெற்றுள்ள முன்னணி நடிகர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரை வெளுத்து வாங்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். 

படம் பார்ப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ள சிபிஎம் தலைவர், "பதான்" பார்க்க பணம் கொடுப்பதற்கு பதிலாக பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளிப்பது நல்லது எனக்கூறியுள்ளார். "பத்தானைப் பார்க்க பணம் செலுத்துவதை விட பசியுள்ளவருக்கு உணவளிப்பது சிறந்தது" என்று பாபு ராவ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பது படத்திற்கான எதிர்ப்பை மேலும் வலுவாக்கியுள்ளது.