24 special

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்ய முயற்சி; வெளுத்துவிட்ட இந்து முன்னணி!


பழங்குடியின மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்ற முயன்றதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் மதமாற்றம் என்பது எளிதான ஒன்று மாறிவருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய பாஜக அரசும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே கர்நாடகா, உத்தரப்பிரதேசம் குஜராத் என பாஜக ஆளும்  சில மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. ஆனால் பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தேவையில்லாமல் மதமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதும், கிறிஸ்துவ மிஷனரிகளின் மதமாற்ற வேகம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 


பள்ளி, கல்லூரிகள் கடந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கே சென்று மதமாற்றம் செய்வது அதிகரித்து வருவதாக தெரிகிறது. தற்போது கிறிஸ்துமஸ் சீசன் என்பதால் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணித்து ஏழை எளிய மக்களின் குடிசைகளுக்குச் சென்று, பரிசுகளை கொடுப்பது போதனை என்ற பெயரில் மதம் மாற பிரெயின் வாஷ் செய்வது போன்ற காரியங்கள் அரங்கேறி வருவதாக இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அப்படியொரு சம்பவம் அரங்கேற இருந்ததை இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாண்டா கிளாஸ் வேடமணிந்து வந்த கிறிஸ்தவர்கள், மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். காயார் கிராமத்தில் இந்து பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியில் இதுபோன்ற செயல் நடப்பதைக் கேள்விப்பட்ட இந்து முன்னணியினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இங்கு கிறிஸ்தவர்கள் வசித்தால் நீங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லலாம். ஆனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள். அப்படி இருக்க, இங்கு உங்களுக்கு என்ன வேலை. முதலில் கிளம்புங்கள் என்று சொல்லி விரட்டி அடித்திருக்கிறார்கள். இதையடுத்து மிரண்டு போன மதமாற்ற கிறிஸ்தவ கும்பல் அங்கிருந்து எஸ்கேப்பாகி இருக்கிறது. இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

https://twitter.com/hindumunnaniorg/status/1602235071670366208