24 special

அந்தர் பல்டி அடித்த சன் டிவி!! பின்னணில இவ்ளோ நடந்துருக்கா?

sun tv
sun tv

அயோத்தியில் ராமர் கோவில் பல இடர்பாடுகளைக் கடந்து மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. மேலும் அதனுடைய கும்பாபிஷேகத்திற்கு பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் முதல் பத்திரிக்கை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் வைக்கப்பட்டது. எனினும் கூட ஸ்டாலின் அவர்களும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் காங்கிரஸில் உள்ளவர்களும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். இந்த கூட்டணியில் அமைந்திருந்த யாருமே உபக்கியத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். மேலும் இடதுசாரிகள் மொத்தமாக கும்பாபிஷேகத்தின் விழாவின்போது ராமர் கோவிலுக்கு எதிரான கேள்விகளையும்,சாரம் வாரியாக கருத்துக்களையும் முன்வைத்து வந்தார்கள். 


இதை தொடர்ந்து உலகின் பல இடங்களில் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகமானது நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ச்சியாக திமுக அனைத்து பண்டிகைகளுக்கும் தனது சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் இன்று வரையிலும் தீபாவளி அன்று அவர் ஒரு முறை கூட வாழ்த்துக்களை கூறியதே கிடையாது. அதற்கு ஏற்றார் போல் தற்போது அயோத்தி கோவில் திறப்பு விழாவில் நேரடி ஒளிபரப்பை ரத்து செய்துள்ளதும், திமுக தனது கட்சியின் பலத்தை மக்களின் மத்தியிலும் செலுத்தி வருவதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.  இது மட்டும் இன்றி தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சென்று வந்த மக்கள்களை திமுகவின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பலவாறு தாக்கியதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 

இந்த நிலையில் அப்போது அயோத்தி ராமர் கோவிலை பார்ப்பதற்காக நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் கூட காங்கிரசை சார்ந்த தொண்டர்கள் இதுபோன்று காங்கிரசில் புறக்கணிப்பு ஏற்படுகிறது என்று அந்த கட்சியில் இருந்து நீங்கி பாஜகவில் இணைந்து வந்தனர். இதுபோன்ற அயோத்தி கோவில் பற்றிய விவகாரம், மற்றும் அதில் திமுக மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் விவகாரம் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திமுகவின் பிரதானம் மற்றும் சொந்த தொலைக்காட்சியாக வளம் வரும் சன் டிவியில் தற்போது ராமாயணம் தொடரை போட்டுள்ளனர். 

ஏனென்றால் 2024 லோக்சபா தேர்தலில் தான் இந்த அயோத்தி ராமர் கோவிலை புறக்கணித்ததால் தான் பல வகையான விமர்சனங்களை சந்தித்து விட்டோம் என்றும், இனி வரப்போகும் 2026 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆவது வாக்குகளை இதன் மூலம் பெற்று விடலாம்!! அதன் மூலம் இந்து மக்களின் மனதிலும் நல்லதொரு இடத்தை பெற்று விடலாம் என்பதற்காகவும் எப்படியாவது 2026 ஆம் ஆண்டில் வரப்போகும் தேர்தலில் வெற்றி பெற்ற விட வேண்டும் என்பதற்காக திமுக இது போன்ற செயல்களைத் தொடர்ந்து  செய்து வருவதாகவும் பலதரப்பட்ட மக்களால் கூறப்படுகிறது.

ஆனால் இதனை இடதுசாரிகள் பலவாரியாக விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் தனது இணையதள பக்கத்தில் "அப்படியே இராமயணம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் அயோத்தி இராமர் கோயிலுக்கு போய்ட்டு வர டிக்கெட் போட்டுக்  குடுத்தா புண்ணியமாப் போகும் ஜி.. கருத்தியல் கண்றாவி  எல்லாம் கட்சியை கண்மூடித்தனமாக நம்பும் அடிமட்டத் தொண்டனுக்கு மட்டும்தானே" என்று சன் டிவியை நோக்கி கேள்வி எழுப்பி வந்துள்ளார்!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. மேலும் தற்போது கட்சி ரீதியில் திமுக ஆட்சி செய்தாலும் கடவுள் மறுப்பு, ஈவேரா பற்றி ஒளிபரப்பினால் யாரும் பார்க்கமாட்டார்கள் என திமுக கருத்தை புறக்கணித்தே சன்டிவி இந்த ராமாயண ஒளிபரப்பில் இறங்கியுள்ளதாகவே விமர்சிக்கப்படுகிறது....