24 special

பாஜகவின் 2026 மாஸ்டர் பிளான்.. அலறும் திமுக, அதிமுக..!

Stalin, Annamalai, Edppadi palanisamy
Stalin, Annamalai, Edppadi palanisamy

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு 2026 தேர்தலுக்கு வேகமெடுத்துள்ளது பாஜக கட்சி. நாட்டில் இன்னும் எம்பி தேர்தலே நடந்து முடியாத நிலையில், பாஜகவின் தொலை நோக்கு திட்டம் தமிழக அரசியலில் வியப்புக்கு ஆழ்த்தியுள்ளது.


நான்கு முனை போட்டியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பாஜக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசநை நடத்தினார். அப்போது நிர்வகிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, "சட்டமன்ற தேர்தலுக்கு 500 நாட்கள் தான் உள்ளது.. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே நாம் திட்டமிட வேண்டும்.. தயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக வடமாநிலங்கள் சென்று என்.டி.ஏ கூட்டணிக்கு பிரசாரம் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல், பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் வடமாநிலத்திற்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இண்டியா கூட்டணிக்கு என்று வடமாநிலத்தில் யாரும் பெரியதாக திமுக உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் சென்று பிரசாரம் செய்யவில்லை என நிலைமை தான் நிலவுகிறது.  லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அண்ணாமலை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்ந்துள்ளாராம். அதாவது, மாவட்ட தலைவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை செய்ய திட்டமிட்டு வருகிறாராம். இந்த செயல் அரசியல் தலைவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூழ்நிலை இப்படி இருக்கையில். பாஜக குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, நடந்து முடிந்த எம்பி தேர்தலில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு தரவில்லை. புது முகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. சில தலைவர்கள் போட்டியிட விருப்பம் இல்லையென்று கூறியும் பாஜக தலைமை வாய்ப்பு கொடுக்க மறுக்க வேண்டாம் என்று போட்டியிட்டதாக அவர்களே கூறுகின்றனர். இதற்கு காரணம், தெரிந்த முகங்களை நிறுத்தியதால் பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஒருபக்கம் அதிமுக கட்சியை மூன்றாவது இடத்திற்கு செல்ல வேண்டும் என பாஜக இந்த தேர்தலில் வேலை செய்ததாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஒரு பக்கம் 2026 தேர்தலுக்கு பாஜக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ஒரு தகவலும் வெளியாகிள்ளது. அண்ணாமலை அவர்கள் அரசியலுக்கு வந்ததில் இருந்து அவருக்கு ஆதரவு கொடுத்த வரிசையில் முதல் ஆளாக இருப்பது இளைஞர்கள் தான் சொல்ல வேண்டும். அவர்கள் தான் அண்ணாமலையை ரோல் மாடலாக எடுத்து கொண்டு அரசியலில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர்.

அதனால், பாஜகவின் "நம்பிக்கை நட்சத்திரமாக" கருதப்படும் இளைஞர்களுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் எதிர்க்கட்சிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துவருகிறது. பாஜக 2026ல் ஆட்சியை பிடிக்க தீவிரமாக வேலை செய்ய தொடங்கி விட்டதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.