24 special

விஜய் டிவி பிரபலங்களை கொத்தாக தூக்கிய சன் டிவி.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Cook with commali, top cooku dupe cooku
Cook with commali, top cooku dupe cooku

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக்வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமையலை மையமாக வைத்து நடக்கும் இந்த நிகழ்ச்சி அந்த சேனலின் டிஆர்பியை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியும் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதில் உள்ள பிரபலத்தையும் சன் டிவி கொத்தாக தூக்கியுள்ளது.


குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கும் இந்நிகழ்ச்சி மன அழுத்தத்தில் இருந்து விடுபட காரணமாக இருந்தது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களும் சினிமாவில் நடிக்கப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அதில் நடுவராக இருப்பவர் வெங்கடேஷ் பட் அதிலிருந்து விலகி சன் டிவி நடத்தும் 'டாப் குக் டூப் குக்' என்ற தலைப்பில் நடத்துவதாக சன் டிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தான் விஜய் டிவி குக் வித் கோமாளி 5வது சீசனை அறிமுகப்படுத்தி ரசிகர்களிடம் பாசிட்டிவ் கருத்துக்களை பெற்று வந்தது. பிரியங்கா தேஷ்பாண்டே, யூடிப்பர் இர்பான், திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், சுஜிதா தனுஷ், வசந்த் வசி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். அத்துடன் கோமாளிகளாக புகழ், குரோஷி, ராமர், மணிமேகலை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சன்டிவி நடத்தும் நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவியில் இருந்து வெளியேறிய மோனிஷா, பரத், தீனா, தீபா, ஜிபி முத்து ஆகியோரை வைத்து புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளது சன் டிவி. விஜய் டிவி போன்று குக்வித் கோமாளி நிகழ்ச்சியை நகைச்சுவையாக நடத்துவது போன்ற அந்த புரமோவில் தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியை பார்த்து காப்பி அடித்து ஒரு ஷோவா என கிண்டலடித்து வருகின்றனர். இதற்க்கு இயக்குனர் அட்லீயே பரவாயில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும், சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தெரிவிப்பது, விஜய் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலங்கள் தான் சன் டிவியை அழைத்து இது போன்ற நிகழ்ச்சியை செய்து வந்ததாக ஒரு தகவல் அடிபடுகிறது. விஜய் டிவியின் டிஆர்பி குறைக்கவே சன் குழுமம் இப்படி ஒரு செய்து வருவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக காமெடி நட்சத்திரம் வைகைப்புயல் வடிவேலுவு கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கேட்கும் ஊதியத்தை சன் டிவி கொடுக்கவும் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

சன் டிவி எதற்காக இப்படி ஒரு வேலையை செய்து வருகிறது புது விதத்தில் ஒரு நிகழ்ச்சியை தொடங்க வேண்டியது தானே விஜய் டிவியை மட்டம் செய்ய எதற்கு இந்த வேலை என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் சன் டிவிக்கு இந்த நிகழ்ச்சி காய் கொடுக்கிறதா என்பது எனவும் கூறுகின்றனர். மேலும், விஜய் டிவி நிகழ்ச்சியை காப்பி அடிக்கும் சன்டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை அசைக்க முடியாது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராகவும் செஃப்பாகவும் இருந்தவர்  தாமு இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.