24 special

பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்... என்ன ஆயிற்று விண்கலத்திற்கு??

Sunitha William
Sunitha William

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு துறையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒரு துறையில் வெற்றியைப் பெற்று மற்றொரு துறையில் பெருமளவில் தோல்வியை கண்டால் அதை வைத்தே இந்த உலகம் நம்மை எடை போடும். அதனால் ஒரு நாட்டிற்கு அனைத்து துறையுமே முக்கியத்துவம் வாய்ந்தது அப்படி நம் நாட்டின் அனைத்து துறைகளும் தற்போது ஏறு முகத்தை கண்டு வருகிறது அதிலும் குறிப்பாக விண்வெளி துறையானது மாபெரும் சாதனையை பெற்று உலக நாடுகள் அனைத்தையும் வியக்க வைத்தது. மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் இந்த விண்வெளி துறையானது உலக அளவில் ஒரு குறிப்பிடத்தக்க போட்டியை கொண்டது. மேலும் இதற்கு பின்னால் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளது. மேலும் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கும் இந்த துறையானது வரலாற்று மற்றும் அறிவியல் புத்தகங்களில் என்றுமே இடம்பெறக் கூடியது. அந்த வகையில் பூமியிலிருந்து எப்பொழுதுமே சிலர் விண்வெளிக்குச் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் சில நேரங்களில் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு பூமியின் காலநிலை மற்றும் சிலவற்றை குறித்து ஆய்வு செய்யப்படும் பூமியை தவிர மற்ற கோள்களிலும் இதுபோன்ற செயற்கைக்கோள்கள் அனுப்பி ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 


அந்த வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது அதற்கான பணியை போயிங் என்று தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது நாசா.  இதனை அடுத்து இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரடான புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரும் பணியை போயிங் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமின்றி இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போயின் நிறுவனம் ஸ்டார் லைனர் என்ற ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்து அந்த ஸ்பேஸ் ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ஆம் தேதி அமெரிக்க கேப் கனாவெரல் ஏவுதலத்தில் இருந்து சுனிதா வில்லியம் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

முன்னதாக இவர்கள் பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்வதற்கு அதிக தாமதங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜூன் 5-ம் தேதி பூமியிலிருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம் மற்றும் புட்ச் கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இதனை அடுத்து ஆய்வுகளை முடித்துக் கொண்டு ஜூன் 14ஆம் தேதி மீண்டும் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் ஸ்டார் லைனில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளிக்குச் சென்ற இருவர்கள் பூமிக்கு திரும்புவது ஒரு மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டார் லைனில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு எந்த அளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த விண்கலன் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் என்பதை மனதளவில் நான் முழுமையாக நம்புகிறேன் இதில் எந்த பிரச்சனையும் இருக்காது தோல்வி என்பது ஆப்ஷன் அல்ல, அதனால்தான் நாங்கள் இப்போது இங்கே தங்கி உள்ளோம் நாங்கள் பூமிக்கு திரும்புவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சுனிதா வில்லியும் தெரிவித்துள்ளார்.